“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நடைபெற்று, இன்று இறுதி போட்டி நடைபெற்றதுடன் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

மேற்படி உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, “தாயகம்” அமைப்பின் நிறுவனர்களான, அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களில், அமரர் திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களின் பிறந்த தினத்தை (19.03) முன்னிட்டு, மேற்படி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

“சமூக சேவகரும், முன்னாள் அதிபர் மற்றும் தாயகம் சமூக சேவையகத்தின் போசகருமான” திரு. எஸ்கே. சண்முகலிங்கம் அவர்கள் இன்றைய நிகழ்வுக்கு தலைமை தாங்கி, ஆரம்பித்து வைக்க முதலில் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியினை “புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண சபை ஆளுநரின் செயலாளருமான”  திரு.இலட்சுமணன்  இளங்கோவன் அவர்கள் ஏற்றி வைக்க, “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் கொடியினை “சமூக சேவகரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான” திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வணக்கத்துக்குரிய திரு.ஜெபஜீவன் (புங்குடுதீவு சவேரியார் ஆலய பங்குத் தந்தை), அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

வாழ்த்துரையை “சமூக சேவகரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான” திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை வழங்க, தலைமையுரையை “சமூக சேவகரும், முன்னாள் அதிபர் மற்றும் தாயகம் சமூக சேவையகத்தின் போசகருமான” திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்களும் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதம விருந்தினர் உட்பட அனைத்து விருந்தினர்களும் உரையாற்றி இருந்தனர். இவர்களின் உரைகளின் போது, “தாயகத்தின்” செயல்பாடுகளை பாராட்டியதுடன், இது போன்ற இளைஞர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதுடன், இந்த இளைஞர்கள் தங்களது விளையாட்டுத் திறமையை மட்டுமல்லாது, கல்வி, தொழில் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும், புங்குடுதீவை நீங்கள் குட்டி சிங்கப்பூராக மாற்றா விட்டாலும் பரவாயில்லை, புங்குடுதீவை, முன்னைய புங்குடுதீவாக மாற்ற உதவுமாறு அனைவரிடமும் கேட்பதாகவும், இன்றைய நிகழ்வுக்கு முழுமையாக உதவிய சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின்  பிள்ளைகள், எமக்கு “தாயகம்” எனும் பெயரில் செய்யும் உதவிகளுக்கு நன்றி எனவும், அவர்களை போன்றோர் செய்யும் உதவிகளுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு, நீங்கள் விளையாட்டில் மட்டுமல்ல, கல்வியிலும் சிறந்து விளங்கி உங்களின் ஊருக்கும், ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமெனவும்” தெரிவித்தனர்.

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. இலட்சுமணன் இளங்கோவன் (சமூக ஆர்வலர், புங்குடுதீவு மண்ணின் மைந்தர் மற்றும் வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர்) அவர்களுடன், விருந்தினர்களாக… வணக்கத்துக்குரிய திரு.ஜெபஜீவன் (புங்குடுதீவு சவேரியார் ஆலய பங்குத் தந்தை), திரு.கா.குகபாலன் ஓய்வு நிலைப் பேராசிரியர், புவியியல்துறை யாழ். பல்கலைக் கழகம்), டாக்டர். கணேஷ் ஸ்ரீதரன் (கமலா வைத்தியசாலை – புங்குடுதீவு), திரு. அருணாசலம் சண்முகநாதன் (சமூக சேவகர்), செல்வி.பொ. யமுனாதேவி (தலைவி, வட இலங்கை சர்வோதயம், புங்குடுதீவு), திரு. வ.அபராஜ் (சுகாதார பரிசோதகர்), திரு.க.வாகீசன் (கிராம சேவகர், & தாயகம் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவர்), திரு.நா.நாகராசா (அதிபர், புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம்), திரு. சு.கருணாகரன் (பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர், புங்குடுதீவு), திரு. பிள்ளைநாயகம் சதீஸ் (தலைவர், புங்குடுதீவு உலகமையம்), திரு.குணாளன் கருணாகரன் (செயலாளர், புங்குடுதீவு உலக மையம்), “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழக தலைவி திருமதி.சி.கலாநிதி (கலா அக்கா), செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்), திருமதி மல்லிகா சுப்ரமணியம் (கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர். நேற்றும், இன்றும் நிகழ்வை திரு.பி.சதீஷ் (தலைவர், புங்குடுதீவு உலகமையம்) அவர்கள், நேரடியாக தொகுத்து வழங்கி இருந்தார்.

வரவேற்புரையை செல்வி காஞ்சனா (தாயகம் சமூக சேவையகத்தின் உப செயலாளர்) வழங்க, நன்றியுரையை செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (செயலாளர், தாயகம் சமூக சேவையகம்) வழங்கி இருந்தார். இன்றையதினம் அரையிறுதி போட்டி, இறுதிபோட்டி, பரிசளிப்பு விழா போன்றவற்றுக்கு முன்பாக, புங்குடுதீவில் “வரலாற்றில் முதன்முறையாகக் களம்கண்ட” இரண்டு விளையாட்டுக் கழகங்களான, “தாயகம்” விளையாட்டுக் கழகமும், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகமும், “காட்சி உதைபந்தாட்டப் போட்டி”யில் ஈடுபட்டு நீண்ட நேர பிரயத்தனங்களில் மத்தியிலும், சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, “பனால்ட்டி சூட்” முறையில் “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகம், “தாயகம்” விளையாட்டுக் கழகத்தை மூன்றுக்கு இரண்டு (3 – 2) கோல் கணக்கில் வெற்றியீட்டி, “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி உள்ளது.

முதலில் “நண்பர்கள்” விளையாட்டுக் கழகமும், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகமும் அரை இறுதிப் போட்டியில் மோதி,  “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகம், “நண்பர்கள்” விளையாட்டுக் கழகத்தை இரண்டுக்கு சைபர் (2 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி, இறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ள மற்றோரு விளையாட்டுக் கழகமான “சென் சேவியர்” விளையாட்டுக் கழகத்துடன் இறுதிப் போட்டியில் மோதினர்.

இறுதிப் போட்டியில் “சென் சேவியர்” விளையாட்டுக் கழகமும், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டியில் மோதி,  “சென் சேவியர்” விளையாட்டுக் கழகம், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகத்தை இரண்டுக்கு சைபர் (2 – 0) கோல் கணக்கில் வெற்றியீட்டி, “சென் சேவியர்” விளையாட்டுக் கழகம் “தாயகம் சமூக சேவை அகத்தின்”, அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இதேவேளை இரண்டாவது இடத்தைப் பிடித்த “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழகத்தினர் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த விளையாட்டு வீரர்களாக, இறுப்பிட்டி “ஐங்கரன்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.அஜந்தன்,  “காந்தி” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.அமல்ராஜ், “நண்பர்கள்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.அஜய், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.அருண்குமார், “அம்பாள்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.நிசாந்தன், “பாரதி” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.சாருஜன், “ஈஸ்ரன்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.சுதர்சன், “சன் ஸ்ரார்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.கலிதரன், “சென் சேவியர்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.எமோஷன், “தாயகம்” விளையாட்டுக் கழக வீரராக செல்வன்.நிரோ ஆகியோருக்கு அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) ஞாபகார்த்த கிண்ணம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த விளையாட்டுக் கழகமாக “நேர்மை, ஒழுங்கு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” போன்ற அடிப்படையில், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகம் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அத்தோடு “தாயகம்” விளையாட்டுக் கழகத்துக்கு, “நேர்மை, ஒழுங்கு” என்பதைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் விளையாட்டுக் கழகம் என்ற ரீதியில் “தாயகம்” விளையாட்டுக் கழகத்துக்கு சிறப்புப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்தோடு,  பாரதி விளையாட்டுக் கழகத்த்தினர், மைதானம் தந்து உதவியமைக்காக “நினைவுப் பரிசில்” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தகவல் தாயகம் சமூக சேவை அகம் – புங்குடுதீவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here