ஈழதேச புரட்சி பாடல்களுக்கு தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்த புங்குடுதீவு அன்னை பெற்றெடுத்த பாடகர் S.G. சாந்தன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். “இந்த மண் எங்களின் சொந்த மண” என்ற தயாகப்பாடல் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தனது இறுதி மூச்சு நிற்கும்வரை பாடிக்கொண்டே இருப்பேன் என்ற மன உறுதியோடு வாழ்ந்து காட்டிய சிறந்த பாடகர். சாந்தன் இயற்கையிலேயே நல்ல கம்பீரக்குரல் வளமும், தமிழ் உச்சரிப்பு திறமையும் மற்றவர்களுடன் எளிதில் பேசும் வல்லமையும் அமையப்பெற்றவர். மேடைகளிலும், ஆலயங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் கூச்சமின்றி பாடும் திறமை மேலும் இசைத்துறையில் முன்னேற உதவி புரிந்தது. அண்மைக்காலங்களில் சாந்தன் சிறுநீரக நோயின் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த போதிலும் தனது உயிர் மூச்சாகிய பாடும் ஆற்றலால் தன் மக்களுடன் பல ஆலயங்களின் மேடைகளை இவர் அலங்கரித்திருந்தார்.

சாந்தனால் பெயர் பெற்ற எம்மண் ஒரு தவப்புதல்வனை இழந்து தவிக்கிறது. சாந்தன் அவர்கள் தீவிர நோய் நிலையில் எமது உறவுகள் எத்தனை உதவி செய்தும் அவர் உயிர் பிரிந்து விட்டது. அன்னாரின் குடும்பத்திற்கும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எம்மக்களின் அஞ்சலிகள் உரித்தாகுக. இந்த மண் எங்களின் சொந்தமண் என்று பாடி எம்மண்ணையும் விட்டு நீங்கிவிட்டார்.

S.G. சாந்தன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here