அருள்மிகு அம்பாளின் அடியார்களே,
அம்பாளின் ஆலயத்தில் அம்பிகையின் அருளாசியால் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) பிரதி தினமும் ஆலய நிர்வாகத்தினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.
தாங்களும் இவ் அன்னதானப் பணிக்குத் தங்களால் இயன்றளவு நிதியுதவியும் பொருளுதவியும் வழங்குவதன் மூலம் இப் பணியை செவ்வனே முன்னெடுத்துச் செல்ல உதவ முடியும். பரோபகார மனம் படைத்த வள்ளல்கள் ஒருநாள் அன்னதானத்திற்கான முழுச்செலவையும் தங்களது பிறந்த நாட்களுக்கெனவோ திருமண நாட்களுக்கெனவோ அன்புக்குரியோரின் நினைவு நாட்களுக்கெனவோ வழங்கி குறித்தநாட்களில் மகேஸ்வர பூஜையை நிறைவேற்றி அம்பிகையின் அருளாசியைப் பெறும் வண்ணம் வேண்டுகின்றோம்.
பிறந்த நாட்களுக்கெனவோ திருமண நாட்களுக்கெனவோ அன்னதானம் வழங்குகையில் குறிப்பிட்டவர்களது பெயர் நட்சத்திரம் என்பனவற்றை அனுப்பிவைத்தால் அந்தந்த அன்பர்களின் பெயர்களில் குறிப்பிட்ட நாளில் விசேட அர்ச்சனை செய்யப்பட்டு விபூதி பிரசாதம் அனுப்பிவைக்கப்படும். அதேபோல உங்கள் அன்புக்குரியவரின் நினைவு நாளுக்கென அன்னதானம் வழங்கினால் அவரது பெயரில் மோட்ச அர்ச்சனை சிவாச்சாரியாருக்குரிய தானம் தட்சணை என்பன வழங்கிச் செய்யப்பட்ட பின் விபூதி பிரசாதம் போன்றவை தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி.
மஹேஸ்வர பூஜை ஒரு நாளுக்கு – ரூபா 10,000/- தொடர்புகளுக்கு click here
அம்பாள் ஆலயத்தில் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் பல்வகையான தர்ம கைங்கரியங்கள், திருப்பணிகள் மற்றும் சமூகநலப்பணிகள் போன்றவற்றிற்கு தங்களால் இயன்றளவு நன்கொடைகளையும் பொருளுதவிகளையும் வாரி வழங்கி அம்பாளின் திருவருளை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுய்ய வேண்டுகிறோம். ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் நற்பணிகளைப் பற்றி மற்றவர்களுக்கும் அறியத்தாருங்கள்.
உணவு உண்ணும் முன் கூற வேண்டிய பதிகம்.
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
மகேஸ்வர பூஜை (அன்னதானம்)