அந்தக்காலத்தில் எங்களுக்கு உடுப்பு எடுப்பது என்றால் றோமா ஸ்ரோ்ஸ் கடை ஒன்றுதான் இருந்தது. இங்கு றோமா விதம்விதமான உடுப்புகளை விற்பனை செய்வார்.
இந்தக்கடையின் பக்கத்தில் றோய் என்ற ரெயிலர் இருப்பார் இவர் எம்ஜீஆர், சிவாஜி பாணியில் உடுப்புகள் தைப்பார் நாளைநமதே படத்தில் எம்ஜீஆர் சேட்டின் பட்டின் போடும் பகுதி இரு வரி மடிப்பு தையல் பிரபல்யம் அவன்தான் மனிதன் சிவாஜிசேட்டு என்றெல்லாம் இளசுகளின் ஓரு நல்ல ரெயிலர்.
பண்டிகை காலங்களில் கடை சூடு பிடிக்கும். எங்கள் வீட்டில் அப்பா ஒரே மாதிரி உடுப்பு எடுப்பது வழக்கம் நட்டுவக்காலி சேட்டை எனது அண்ணன் ஜெமினி போடப்பயந்து திருப்பிக் கொடுத்த கதை சுவாரசியமானது. அந்த மனிதன் இறந்தாலும் அவரின் மகளை மணம்முடித்தவர் டொக்டர் ராஜரட்ணம் அவர்கள்.