இது பெருங்காட்டில் உள்ள ப.நோ.கூ.சங்கம் தலைமைக்காரியாலயம்.

இந்தச் சங்கம் புங்கடுதீவு மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்தது. தற்பொழுது அதன் சேவை நலிவடைந்து போய்விட்டது.

இந்தச்சங்கத்திற்கு மக்காளால் தெரிவு செய்யும் குட்டி பாராளுமன்ற மரபுமுறை அந்த நாள்முதல் இந்த நாள் வரை உண்டு . அந்த நாள் சங்கத்தேர்தல் களை கட்டும். இதில் பெருங்காட்டில் மணியம் கடை வைத்திருந்தவரின் மகன் கருணாகரன் அவர்கள் தலைவராக இருந்த காலம் எமது காலத்தில் இருந்தது. பின் கனகலிங்கம், இராஜரட்ணம், என்று தற்போது நாகராசா அதிபர் தலைவராக இருக்கிறார்.

சங்கத்துக்கு லொறி, நயினாதீவு லோஞ்சி என்பன உண்டு புங்குடுதீவு பெரும்பாலனவர்களுக்கு வேலை வழங்கிய இடம். இந்தச் சந்தி எனக்கு பரீட்சயம் இல்லை. பக்கத்தில் கனகரட்ணம் எனும் வைத்தியர் இருந்தார். புங்குடுதீவு மக்களின் துயர்நோய் போக்கிய மகான்.

சந்தையடி ஒரு கலக்கு கலக்கிய மகான். பக்கத்தில் ஒரு காணி வாங்கி கட்டிடம் தொடங்கிய வேளை எமது மண்ணிலே காலமாகிவிட்டார். எமது சனம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இதற்கு பக்கத்தில் பிரதான தபாலகம் இப்பவும் இருக்கிறது. மொத்தமாக சொல்லப்போனால் புங்கடுதீவின் ரவுண் என்டு சொல்லலாம்

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here