வணக்கம் அன்பு உறவுகளே!!!

எமது சங்கத்தின் தாயகம் நோக்கிய பல்வேறு திட்டங்களின் ஒன்றாக இந்த வருடம் ஒன்றுகூடல் Raffle tickets விற்பனையின் முழுப்பணமும் முள்ளிவாய்க்கால் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு அனுப்பப்பட இருப்பதாக எமது சங்க பொருளாளர் உமாசங்கர் (அழகன்) அறிவித்து இருந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் சேர்க்கப்பட்ட முமுப்பணம் மூன்று இலட்சம் ரூபாய் முள்ளிவாய்க்கால் தமிழ்மாறன் முன்பள்ளிக்கு அனுப்பப்பட்டு அவர்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு உதவிய அனுசரணையாளர்கள், சங்க பொருளாளர், விற்பனைச்சீட்டுக்களை வாங்கிய அன்பு உறவுகள் அத்துடன் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்கும் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி
நிர்வாகம்

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here