குளியாப்பிட்டி அறுமுகம் என்பவர் பிரபல புங்குடுதீவு புகழ்பூத்த வர்த்தகர். குளியாப்பிட்டியில் வர்த்தகம் செய்ததால் இப்பெயர் பெற்றரா். அம்மா என்பவரின் கடை என்பதால் அம்மா கடைச்சந்தி என்று இப்பகுதிக்கு பெயர் வந்தது.
இந்த இடம் பிற்கால6த்தில் பக்கத்தில் குழந்தை என்பவர் கடை வைத்திருந்ததால் குழந்தைகடைச்சந்தி எனப் பெயர் பெற்று தற்போது அப்பன் கடை வைத்திருப்பதால் அப்பன் கடைச்சந்தி என்று அழைக்கப்படுகிறது. எனினும் அம்மா கடைச்சந்தி என்பதுதான் சாலப் பொருந்த வேண்டும்.
இந்த கடையில் ஒன்றுதான் டாக்டர் கணேஸ் அவர்கள் 1958 ஆம் ஆண்டு வைத்தியநிலையம் ஒன்றை ஆரம்பித்தார். பக்கத்தில் இலவட்சுமணன் என்பவர் கடை வைத்திருந்தார் தற்போது சைக்கிள் கடை ஒன்று நடைபெறுகிறது. பல சரித்திரம் கண்ட இந்தக்கடையை ஒரு பூட்சிற்றியாக மாற்றினால் என்ன. பலருக்கு உதவும் குளியாப்பிட்டி ஆறுமுகத்தாரின் பெயர் நிலைக்குமல்லவா?