இது ஆலடிச்சந்தி இந்தச் சந்தி முக்கியமானது. அந்தக்காலத்தில் யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை. பின் 10 ஆம் வட்டாரம் நடராசா நாகம்மா என்பவருக்கு சொந்தமாகி பின் மணியம் கடை பெருங்காடு அவரின் புத்திருக்கு சொந்தமாகி இவ்வாறு புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு 1991 சீமெந்து பிரச்சினையால் நிறைவு பெறவில்லை. அவரின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகிவிட இடப்பெயர்வுக்கு பின் ஜெயபால் என்பவருக்கு சொந்தாமாகி ரமணன் என்பவர் தற்போது மில் சேவிஸ்ஸ்ரேசன் என்பன போட்டிருக்கிறாா்.
இது வரலாறு இந்த இடம் பெரிதாக எடுபட்டதாக தெரியவில்லை. சந்தி என்றளவுக்கு காணாது. அதுக்கு ஒரு வரலாறு இருக்குது எனக்கு தெரிந்ததது பல விடயங்கள் முதிர்ந்த மக்களுக்கு தெரியும் எனினும் இந்த சிறியேனின் வரலாறு பிழையிருந்தால் திருத்தவும் அது பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் எனக்கு தேவை சரியான வரலாறு.
இதில் சிலரின் பெயர்கள் தெரியாது அதனால் சில மக்களால் அன்பாக வைத்த புனை பெயர்கள் சுட்டிக்காட்டப்படுகிறது அது அவர்களை மட்டும் சொந்தம் கொண்டாட என்னும் பெருமைக்கே தவிர இதனால் அவர்களின் உறவுகள் மனம் நோகவல்லஎன்பதையும் அது தங்கள் யாரையாவது புண்படுத்துமானால் அதற்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப்பகுதியில் ஆதிக்குடிகள் கடலிலே தொழில் செய்யும் திமில்சமூகத்தைச் சேர்ந்த எமது உறவுகள். அவர்கள் இருந்த இடத்தையே எமது ஆட்கள் அந்தக்காலத்தில் அடித்து விரட்டியதாக ஒரு வரலாறு இந்தக்காணிகளின் உறுதிகளில் திமிலர்களின் பகுதி என வரி வருகிறது. அவர்கள் அறம்பாடி விட்டு போனதால் இந்த இடம் உருப்படுது இல்லை. இவ்வாறுதான் யாழ்ப்பாணம் மனோகராத்தியட்டர் இப்பவும் அப்படியே இருக்குது.
இந்த இடத்தில் முந்திய கட்டிடம் சலூன் இருக்கும் கடை முன்னால் கடை பக்கதில் கூட்டுறவுச்சங்கம் என்றெல்லாம் இருந்தது. சின்ன வயசில் எமக்கு பொழுது போக்கு திரைப்படம் தியட்டரில் பார்ப்பது.
அதற்கான போஸ்டர்கள் இதன் சுவரின் ஒரு பகுதி அலங்கரிக்கும்.சிவாஜி, எம்ஜீஆர், ஜெய்சங்கர், ஜெமினிக்ணேசன், ரவிச்சந்திரன், முத்தராமன் ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்க்க இங்கு இளஞ்சிட்டுக்கள் வருவார்கள் சின்ன படங்களை கிழித்து வீட்டிலே ஒட்டுவது ஒரு ரசிகர் மற்றரசிகரின் படத்துக்கு சாணி எறிவது என பல விளையாட்டுக்கள் இதெல்லாம் இப்ப இல்லை. காலையில் 4 மணிக்கு பஸ்எடுக்க கொழுப்பு வியாபாரிகள் என இடம் பலபேரின் தரிப்பிடம். நாங்கள் ஈஸ்ரன் கிளப் பெடியள் விளையாடி விட்டு கள்ள மாங்காய் பிடுங்கி சீமெந்த பாக் வாங்கி பங்கிடுவது ஒரு பொழுது போக்கு. பக்கத்தில் சிவசாமி மாஸ்ரர், செல்வரட்ணம் ஆசிரியர் என்றெல்லாம்.
சிவசாமி ஆசிரியரின் முயற்சி இந்த இடம் நெசவுசாலை ஆலடி வாசிகசாலை என்பன உருவாகியது. கார்திகேசு அதிபர் சேர்மனாக இருந்த பொழுது கந்தையர் (பீப்பா) பலர் இந்த பிரதேசத்தை வளர்க்க பாடுபட்டார்கள். அந்தக்காலத்தில் இவர்கள் நீபெரிசு நான் பெரிசு என்று சண்டைபிடிக்க வில்லை. எல்லோரும் ஒன்றுபட்டு பாடுபட்ட உழைத்த உத்தமர்கள் அவர்கள் வாரிசுகள் நல்லா இருக்கிறார்கள் சிவசாமி ஆசிரியர் மகன் பிறேம்ஜெயந் சகமாணவ நன்பன் தற்போது பேஸ்புக்கில் அறிமுகமாகிவிட்டோம்.
பல்கலைக்கழகம் அவன் போனதுடன் தொடர்பு இல்லை. அவர்கள் வீடு இங்குள்ள ரமணன் எனும் நல்ல பிள்ளையின் கையில் இருந்து வடிவாக இருக்கிறது. அதனால் வீட்டுக்கு போகும் போது எங்கள் பழைய நினைவுகள் வந்த போகும் அந்த வாசிக சாலை, நெசவுநிலைய கட்டியத்தை பொது மாநாட்டு மண்டபமாகிகினால் நல்லது பலவிடயங்களுக்கு பயன்படும் எமது மூதாதையர் வழியில் நாமும் சென்றால் எங்கள் அப்பா அம்மாாவுக்கு பெருமை.
இந்த ஆலடிச்சந்தியில் ஒரு குறுநில மன்னனாக ஜெயபால் அவர்கள் இருக்கிறாா். சரி நீங்கள் உங்கள் அனுபவங்களை அலசிஆராயுங்கள் இது கருத்துக்களம் பழைய நினைவுகளை மீட்பதால் ஊர் விடயங்கள் எல்லோருக்கும் தெரிய வரும்
தகவல் Sritharan Ganesh