திருமதி வள்ளியம்மை திருச்செல்வம்
பிறப்பு : 15 மே 1940 — இறப்பு : 9 யூன் 2012

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 42, வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், தற்போது இந்தியாவில் வசித்து வந்தவருமான வள்ளியம்மை திருச்செல்வம் அவர்கள் 09-06-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பொன்னாச்சி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், வல்லிபுரம், பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அமராவதி, நவரட்ணம் மற்றும் தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மராணி, சுதர்சன், சுபராணி, காலஞ்சென்ற சுபதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜகோபால், காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் ஜெயதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, வைத்தீஸ்வரன் மற்றும் மங்கையற்கரசி, ராஜலட்சுமி, அன்னலட்சுமி, திருஞானம், தனலட்சுமி, திருநாவுக்கரசு, யோகலட்சுமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரா, லிவிகா, விதுசன், அஜிதன், ரிதுசன், ஜனிசா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் இந்தியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753154337
சுதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625980317

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here