அதிபர் செல்வி.சுபந்தினி பரஞ்சோதி B.Sc, SLPS-3 (26.03.2020 – 08.01.2021)
பாடசாலையின் அதிபர் திரு.சு.கனகரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல பாடசாலையின் பிரதி அதிபராக இருந்த செல்வி.சுபந்தினி பரஞ்சோதி அவர்கள் 26.03.2020 இல் அதிபராக பதவி ஏற்றுள்ளார்.


இவருடைய காலப்பகுதியிலும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாடசாலை நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டமையால் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் செயலிழந்தது.


பாடசாலையின் பவள விழாவிற்கான (17.01.1946-17.01.2021) முன்னாயத்தங்கள் செய்யப்பட்டன. பவள விழாவினையொட்டி பாடசாலையின் பெயரினை மத்திய கல்லூரியாக தரம் உயர்த்துவதற்கான உத்தியோகரீதியான சகல ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு அதற்கான மனு முறைப்படி அதிபரால் வேலணை வலய கல்விப்பணிப்பாளர் ஊடாக 25.05.2020 இல் மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாடசாலையின் பாதுகாப்பு கருதி இணைபாடவிதான அறக்கட்டளை நிதியின் ஊடாக 30.05.2020 இல் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டது.
க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரான்ஸ் மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் மதிய உணவு வழங்கப்பட்டதோடு மாலை நேர மேலதிக வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டது. பிரதி அதிபராக திரு.கி.விநோதன் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.
திரு.ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here