புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக நிலையமும் குறிப்பிடத் தக்கது .

புங்குடுதீவில் ஒரு கரப்பந்தாட்ட வல்லமை, ஒரு சைக்கிலோட்டப்போட்டி, ஒரு வாசிகசாலை வாசிப்பு என்று மனசை ஓட விட்டோமானால் முன்னே வந்து நிற்கும் பெயர் சிவலைபிட்டி சனசமூக நிலையம் என்பதே உண்மை.

இல் ஆரம்பிக்க பட்ட இந்நிலைய கட்டிடம் பிரதான வீதியின் தம்பர் கடை சந்தியிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் மானவெள்ளை-மற்றும் காளிகோவிலை நோக்கி செல்லும் சிறிய வீதியில் அழகாக அமைந்துள்ளது.முற்பகலில் நிலையதினாரல் நடத்தப்படும் முன்பள்ளியும் பின்னர் வாசிகசாலையாகவும் இயங்குகிறது இக்கட்டிடம் .

இச் சனசமூக நிலையத்தின் ஆரம்பகால தலைவராக ஐ.பசுபதி அவர்களும் செயலாளராக மு.மயிலவாகனமும் அவர்களும் நிர்வாகத்தை சிறப்பித்தனர்.

தொடர்ந்து வந்த காலங்கள் சிவலைபிட்டி சனசமூக நிலையத்தின் பொற்காலம் எனலாம்.

புங்குடுதீவின் சிறப்புமிகு சமூக சேவை நிறுவனங்களுக்கு கிடைத்த வழிகாட்டிகளாக ஊரதீவுக்கு எஸ் கே மகேந்திரன், மடத்துவெளிக்கு கண்ணாடி சண்முகநாதன் வல்லனுக்கு ஐயாத்துரை ஆசிரியர் கிழக்கூரில் மு.தளயசிங்கம் பெருங்காட்டுக்கு சு.வில்வர் இருபிட்டிக்கு க.திருநா என் நீண்டும் இந்த வரிசையில் சிவலைபிட்டிக்கு கிடைத்த பாசறை வழிகாட்டி அம்மான் என்று செல்லமாக அழைக்கப்படும் ஐ.மகேந்திரன் ஆவார். இவரது சிறப்பான அன்பான வழிகாட்டலில் இந்த பகுதி இளைஞர்கள் அனைவரும் அணிதிரண்டு தொண்டு செய்வதில் முன்னின்றனர்.

இந்த நிலையத்தின் சேவை வரிசையில் தையல் பயிற்ச்சி நெசவு சாலை சிறுவர் பாடசாலை காளி கோவில் தொண்டு அன்னதனசபை பணி சமூகத்தொண்டு விழாக்கள் சிறப்புமிகு வருடப்பிறப்பு விளையாட்டு போட்டிகள் என அடுக்கி கொண்டே செல்லலாம் . இந்த நிலையத்தின் நிர்வாகத்தினை ஐ பசுபதி மு.மயில்வாகனம் சி.மன்மதராசா, ப.நகுலேஸ்வரன், ப.தயானந்தன், ப.அருள் தங்கராச சின்னராச க.சண்முகலிங்கம் க.ஸ்ரீதரன், சிவ.சந்திரபாலன் போன்றோர் நினைவில் உள்ளனரா.

காலக்கிரமத்தில் மற்றோரின் விபரம் செர்த்துகொள்ளப் படும் . காலப் பகுதியில் மன்மதராசா பொருளாளராகவும் சிவ.சந்திரபாலன் செயலாளராகவும் பணி புரிந்த காலத்தில் சிறுவர் பாடசாலை நவீன கல்வி முறைக்கு மற்றப் பட்டது .

சனசமூக நிலைய அறிக்கை விதிகள் செயல்பாடுகள் கோப்பு முறையாக்கப் பட்டு அரச அதிபர் அலுவலரால் அன்கீகரிக்க்கப் பட்டு A தர சனசமூக நிலையமாக ஏற்கப்பட்டது . ஏராளமான சினேகா பூர்வ கரப்பந்தாட்ட உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தப்பட்டன.அன்னதான மண்டப பணிக்கான திட்டம் தீட்டப் பட்டு செயல் முறைப் படுத்தபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here