இங்கு காணுவது அம்பலவாணர் அரங்கடி இதிலே கிரிக்கட் விளையாடிய அனுபவம் உள்ளது.
இப்போது கிணறு கட்டியிருக்கிறார்கள். இந்த அரங்கடியிலும் பல கதைகள் பரிமாறலாம். இப்போதைய சந்ததிக்கு அம்பலவாணர் யார்? இந்த அரங்கு என்ன என்பது தெரியாமல் போனது எமது ஊருக்கு கிடைத்த துரதிஸ்டம்.
1950-1970 பகுதியில் இந்த பெரியவாணர். சின்னவாணர் என்பவர்களில் பங்களிப்பு இந்த ஊருக்கு இருந்தது. மலேசியாவில் பிறந்து மலேசியா என்பது அந்தக்காலத்தில் வெள்ளைக்கார்ரகள் இலங்கையை ஆண்ட போது யாழ்ப்பாணத்து தமிழர்கள் மிகவும் பணிவுள்ள சிறந்த வேலையாட்கள் என்பதை உணர்ந்து தங்கள் றெயில்வே, றோட்டு போன்றவை போடுவதற்கு எங்கட ஆட்களை பயன்படுத்தியுள்ளனர்.
மலேசியா நாடு கடைசியாக வெள்ளைக்காரனால் பிடிபட்டது. அந்த நேரம் இலங்கையில் பயிற்றப்பட்ட எமது உறவுகள் மலேசியாவில் வேலை செய்தார்கள்.
அந்த மாதிரி போனவர்கள்தான் வாணர் அவர்களின் மூதாதைகள். இருந்தும் நாட்டுப்பற்று அவர்களை விடவில்லை. அங்கு பாதைகள் போடப்பட்ட விதத்தை அப்படியே இங்கு வந்து வேலணை மடத்துவெளி பாலம் புணரமைப்பில் இவர்கள் ,ஈடுபட்டார்கள்.
இப்போது நவீன இயந்திரங்கள். அந்தக்காலத்தில் ஒஸ்டின் லொறி, மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் றோட்டு போடப்பட்டது. அதற்காக வீராமலைப்பகுதியில் இருந்து ஏராளமான கற்கள் அப்பகுதி மக்கள் தங்களுக்கு றோட்டு வருகிறது என்று சிரமதானம் மூலம் போடுவதற்கு உதவினார்கள்.
அவர்களின் கஸ்டம் இன்று ஒரு மணிநேரத்திற்குள் புங்குடுதீவுக்கு போய் வரக்கூடியதாகவிருக்கிறது. தற்போது இந்த றோட்டு காப்பெற் றோட்டாக இந்த வருடம் அமையவிருக்கிறது. இனி அரை மணி நேரத்தில் ஊருக்கு போய் வரலாம். இது கிஸ்ரி.
நாங்கள் அதன் பின் அனுபவிச்சவை ஏராளம் எவனாவது ஒருவனாவது மடத்துவெளி துறையில் இரு பக்கமும் புங்குடுதீவு வரவேற்கிறது என்று இந்த வாணர் இரு கையாலும் வரவேற்கிறமாதிரி சிலை வைத்தாங்களா?
சும்மா பள்ளிக்கூடம் நூற்றாண்டு விழா அது இது என்று சுகி சிவம் போன்றவர்களை இந்தியாவில் இருந்து அழைத்து பலாலி எயாப்போட்டில் வரவேற்கிற படம் எடுத்து பேப்பரில் போட்டு கணேசவித்தியாலய விழா கொண்டாடி போத்தல் தண்ணணீர் (சாட்டித்தண்ணீர் இருக்க) சாப்பாடு என்று வீண் விரயம் செய்தது பல.
சரி இனியாவது வெளிநாட்டுக்காசில் எமது ஊருக்கு தொண்டு செய்த உயர்ந்த உத்தமர்களை நினைவு கூர புத்திஜீவிகள் உணர வேண்டும். அதுதான் நாம் விட்டுச் செல்லும் எச்சங்கள்.
குறிப்பு – இதில் யாரையும் நான் குறைகூறவில்லை மனதில் பட்ட ஆதாங்கத்தை எழுதினேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
தகவல் Sritharan Ganesh