இதுதான் புங்குடுதீவின் சிற்றி என்று சொல்லக்கூடிய பெருங்காட்டுச்சந்தி இதில் அந்த நாட்களில் வியாபாரத்திற்கு பேர் போன புங்குடுதீவார்கள் குளியாப்பிட்டி ஆறுமுகம், ரத்கம சண்முகம், பழக்கடை மாணிக்கம், சோ.க.ஐயம்பிள்ளை, அருமை உணவகம், இரத்தினபுரி, பொரளை என்றெல்லாம் வியாபார பெருந்தகைகள் இருந்தாலும் மணியம் என்பவர் ஊரிலே பெரிய எடுப்பிலே இப்போது பூட்சிற்றி மாதிரி ஒரு இருமாடிக்கட்டிடத்தில் கடைஒன்றை பெருங்காட்டில் நடத்தி வந்தது தீவின் இமாலய சாதனை என்று சொல்ல வேண்டும்.
இந்த கடையை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வியாரம்அப்படி , வேலையாட்கள் என்று களை கட்டும். பக்கத்தில் பரநிருபசிங்கம் என்பவர் அதற்கு சளைக்காமல்ஒரு கடை வைத்திருந்தவர்.
பேப்பர் வாங்க அவரிடமே நாம் போக வேண்டும். பக்கத்தில் தண்ணீர் பவுசர் சாரதி செல்வராசா என்பவர் ரயர்ரியூப் ஒட்டும் கடை, இந்திரன் என்பவரின் சைக்கிள் கடை என்றெல்லாம் பக்கத்தில் புங்குடுதீவு வீசி, சவேரியார் ஆலயம், புங்குடுதீவு மகாவித்தியாலயம், முன்னால் சலூன்,சாப்பாட்டுக்கடை நிறைவான ரவுண்.
பக்கத்தில் தபாலகம், இலங்கை வங்கி ஏன் நீதிமன்றுகூட நடைபெற்றது. இவ்வாறு சிற்றியாக இருந்த இடம் இன்று சோபையிழந்து கிடக்கிறது. இதில் பெரிய முதலீடு செய்து இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால் எப்படியிருக்கும்.
தகவல் Sritharan Ganesh