திருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை
இறப்பு : 11 யூன் 2012
புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்லத்துரை அவர்கள் 11-06-2012 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் சிவகாமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை(முன்னாள் யாழ்.மத்திய கபே உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(கனடா), குணபாலன்(பிரான்ஸ்), கிருபாலன்(இந்தியா), தர்மினி(லண்டன்), ருக்மினி(கனடா), தர்மபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினி(கனடா), ஜோதிலட்சுமி(இந்தியா), பத்மநாதன்(லண்டன்), நந்தகுமாரன்(கனடா), வனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினசபாபதி, காலஞ்சென்ற கனகசபாபதி, பராசக்தி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருமேனி, பரமேஸ்வரி, மரகதம்பிள்ளை, காலஞ்சென்ற நாகம்மா, காலஞ்சென்ற சுப்ரமணியம், காலஞ்சென்ற சின்னையா, காலஞ்சென்ற முத்தம்மா, ராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வாகினி, சோபிகா, அகிலன், அனுஷ்கா, விஷ்ணுபிரியா, ஜேய்மோகன், தர்மிலா, மிதிலா, தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2012, 11:00 மு.ப
முகவரி: Golders Green Crematorium near Hoop Ln, London NW11 7NL
தொடர்புகளுக்கு
தர்மினி பத்மநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085715792
சிவபாலன் — கனடா
தொலைபேசி: +19052820026
குணபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33142386046
ருக்மினி நந்தகுமாரன் — கனடா
தொலைபேசி: +14167415362