புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு.13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா துரைராசா அவர்கள் 04.07.2009 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வேதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும், தனலெட்சுமியின்(மணி) அன்புக்கணவரும், உதயகுமாரன், பாலகுமாரன்(ஜேர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார், சசிகலா, உமா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், ஸ்ரிபன், சபிதன், ஜஸ்மிதா, நிவேதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்புப்பேரனும், கலைமகள், வில்வரெத்தினம்(இலங்கை), சொர்ணலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும், சர்வாலேகநாதன்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(ஜேர்மனி), சிவலோகநாதன்(இலங்கை), மல்லிகாதேவி(டென்மார்க்), சர்வானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற குலசிங்கம் , காலஞ்சென்ற நடராசா, நிர்மலாதேவி, புனிதவதி, தேவகி, நாகேஸ்வரி, செளந்தர்ராசன், திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.07.2009 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொழும்பு கனத்தை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
உதயகுமாரன் – ஜேர்மனி 0049 70218603791
பாலகுமாரன் – ஜேர்மனி 0049 7158709630
மனைவி தனலெட்சுமி – இலங்கை 0094 112546151