புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் முதியவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தின்கீழ் மார்கழி மாதத்திற்கான 110 முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வைக்கப்பட்டது.
பேரன்புடைய எம் ஊரின் உறவுகளே!
தேவையறிந்து சேவை செய்வதே நோக்கமாக எமது மண்ணின் 12 வட்டாரங்களிலும் வதியும் மூதாளர்களை இனங்கண்டு அவர்களுக்கும் வழங்கிட முனைந்து வருகின்றோம் எனவே இந்த தார்மீகப்பணியில் உங்களையும் எம்மோடு கரம்கோர்த்து பயணிக்க வேண்டுகின்றோம்மேலும் இவ் தர்மப்பணியில் இதுவரை எம்மோடு இணைந்து நிதியுதவி செய்துவரும் அனைத்து கொடையாளர்களுக்கும் பயன்பெறும் முதியவர்கள் சார்பிலும்,எமது அமைப்பின் சார்பிலும் புங்குடுதீவு மக்கள் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை கூறி மகிழ்கின்றோம். நன்றி
