1816 ஆம் ஆண்டில் யாழ்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்கன் மிஷனரிமாறினால் இப்பாடசாலை நிறுவப்பட்டது. ஒரு திண்ணைப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1872 இல் தனக்கென ஒரு தனிக்கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டது.

அமெரிக்கன் மிஷன் தேவாலய திருச்சபை ஊழியராக இருந்த “ரிச்சர்ட் கணபதிப்பிள்ளை ” இப் பாடசாலையின் முதல் அதிபராகவும், ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்தார். இவரத்தொடர்ந்து “டானியல் ஞானபிரகாசம் ” அவர்களும், திரு வே . அமரசிகம் அவர்களும் அதிபராக இச் சேவையைத் தொடர்ந்துள்ளனர். இவரைத்தொடர்ந்து திரு நா. பொன்னையா அவர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்து வந்துள்ளனர்.

1962 இல் இப்பாடசாலை அரசுடைமையாக்கப்பட்டது. 1968 இல் இருந்து இப்பாடசாலையின் அதிபராக திரு நா. நடராஜா அவர்கள் கடமையாற்றி உள்ளார். இக்கால கட்டத்தில் இந்து சமய நிகழ்வுகள் இப்பாடசாலையில் இடம்பெற்றது.பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவாக்கப்பட்டது. இப்பாடசாலையில் இடப்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் 7 1/2 பரப்புக் காணி விலைக்கு வாங்கி கொடுக்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து  இவரது மனைவி திருமதி.சிவபாக்கியம் அதிபராகக் கடமையாற்றினார். 1972 இல் புதிய கல்வித் திட்டத்திற்கு அமைய அரசால் இப்பாடசாலை ஓர் ஆரம்பப்  பாடசாலையாக தரம் குறைக்கப்பட்டது. இவருடைய காலத்தில் அரச உதவியுடனும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியுடனும் புதியதோர் கட்டிடம் அமைக்கப்பட்டது. 14-03-1974 இல் கட்டிடத்திறப்பு விழாவுடன் நூற்றாண்டு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இக்காலப் பகுதியில் இங்கு 217 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

இவரைத் தொடர்ந்து திரு சு. பூராசா அதிபராக பதவி வகித்தார். இக் காலத்தில் இப்பாடசாலை சகல துறைகளிலும் துரித வளர்ச்சி கண்டது. இவருடைய காலப்பகுதி இப்பாடசாலையின் பொற்காலமாகும். யாழ் – கல்வி திணைக்களத்தினால் முதல்தர ஆரம்பப் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டது.இக்காலப்பகுதியில் இப்பாடசாலையில் 230 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

17-10-1991 இல் இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பாடசாலை ஏனைய புங்குடுதீவு பாடசாலைகளுடன் இணைந்து சிறிது காலம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாலை நேர பாடசாலையாக இயங்கியுள்ளது. பின்னர் அதிபர் திரு சு. பூராசா அவர்களின் முயற்சியால் 1992 இலிருந்து யாழ் செட்டித்தெரு மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையுடன் இணைந்து காலை நேரப்பாடசாலையாக இயங்கியது. இப்பாடசாலை 30-10-1995 இல் தென்மராட்சசிக்கு இடம் பெயரும் வரை தனது கல்விப்பணியை சிறப்பாக செய்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையில் மாணவர் தொகை அதிகரித்தமையாலும் மெதடிஸ் மிஷன் பாடசாலையில் மாணவர் தொகை அதிகரித்தமையாலும் கல்வித் திணைக்களத்தினால் இரண்டு தற்காலிக கட்டிடங்கள் அமைக்கப்பட்டான. இக்காலப்பகுதியில் 217 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர்.

30-10-1995 இல் இப்பாடசாலை இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னி நிலப்பரப்புக்கு இடம் பெயர்ந்தது. அதிபரின் முயற்சியால் இப்பாடசாலை இராமநாத புறத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு கல்விப்பணியைத் தொடர்ந்தது. 30-10-1995 இல் வன்னிக்கு இடம்பெயர்ந்த இப்பாடசாலை மீண்டும் 4-1-2-12 இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அதிபராக திருமதி யோகராணி விநாயகமூர்த்தி அவர்கள் கடமையாற்றுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here