புங்குடுதீவிலுள்ள பெரிய இறுப்பிட்டி என அழைக்கப்படும் கிராமத்தில் இப் பாடசாலை அமைந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு சில பெரியவர்களின் நல் ஆசியுடன் அமைக்கப்பட்டது.
பசுபதிப்பிள்ளை விதானையார் அவர்களும் திரு வேலாயூதர் விசுவலிங்கம் என்பவரும் மற்றும் சில பெரியவர்களும் ஒன்று சேரந்து நான்கு பரப்புக் காணியை அன்பளிப்புச் செய்து ஸ்ரீ நடராசா ஐயர் அவர்களின் ஆசியுடன் 1914ம் ஆண்டு இப் பாடசாலை திருவாளர் க. நாகலிங்கம் அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு இப் பாடசாலை அமைக்கப்பட்டது.
திருவாளர் வ. பசுபதிப்பிள்ளை அவர்களின் முகாமைத்துவத்தில் இருந்த இப் பாடசாலை 1926ம் ஆண்டு சைவ வித்தியா விடுதிச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இக் கால கட்டத்தில் திரு.ஆறுமுகம் சுப்பிரமணியம் என்பவர் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
தற்காலிக கட்டடமாக திகழ்ந்த இப் பாடசாலை தீயினால் அழிந்த போது சைவ வித்தியா விடுதிச் சங்கத்துடன் கிராம மக்களும் பிரபல வர்த்தகர் திரு. சி. செல்லத்துரை அவர்களும் திரு. மா.முருகேசு உடையார் அவர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் புனருத்தானம் செய்து வைத்ததனர்.
இக் காலத்தில் அதிபர் திரு.நா. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் பல துறைகளிலும் சிறந்து விளங்கியது. 1986ம் ஆண்டு க.பொ.த. பரீட்சையில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்று எல்லோருடைய பாராட்டையும் இப் பாடசாலை பெற்றுக் கொண்டது. இதன் பின் 1962ம் ஆண்டு இப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.
கு.வி.செல்லத்துரை அதிபர் அவர்களும் தொடர்ந்து அதிபராகக் பணியாற்றிய அவரது மனைவி திருமதி. ப. செல்லத்துரை அவர்களும் திரு.கா. து. கனகசுந்தரம் அவர்களும் இப் பாடசாலையை பல வழிகளில் முன்னேற்றமடைய வைத்தும் விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்றை அமைப்பதற்கு உதவியதுடன் இப் பாடசாலையை மகா வித்தியாலயமாக மாற்றுவதற்கு அரும்பாடுபட்டார்கள். தொடர்ந்து திரு. சி. நடேசு திரு.க. ஏரம்பு, திரு.ந. தர்மலிங்கம் ஆகியோர் அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளனர்.
தொடர்ந்து 25க்கு மேலான ஆசிரியர்களையும் 322க்கு மேற்பட்ட மாணவர்களையும் கொண்டிருந்தது. 1991ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த வேளை அதிபர் திரு. நா. தர்மலிங்கம் அவர்கள் கல்லூரி வளாகத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து ஆனைப்பந்தி பட்டப்படிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தொடர்ந்து 1995ல் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்தனர். பின் 1996ம் ஆண்டிலிருந்து இப் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இக் கிராமப் பெரியார்களும் தீவக வலயக் கல்விப் பணிப்பாளரினதும் பெரு முயற்சிகளினால் இப்பாடசாலை 2000 ஆண்டிலிருந்து மீண்டும் தனது சொந்த இடத்திலேயே மீள ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் பணியைத் தொடர்கின்றது. தற்போது திரு. ந. கலைநாதன் அவர்கள்
கடமையாற்றி வருகனின்றார்.