நாடெங்கிலும் உருவாக்கப்பட்ட ஆங்கிலப்பாடசாலைகளில் புங்குடுதீவு மகா வித்தியாலயமும் ஒன்றாகும். இலவசக் கல்வியின் தந்தையான அன்றைய கல்வி அமைச்சர் கௌரவ சி. டபிள்யு டபிள்யு கன்னங்கரா அவர்களாலும், தீவுப்பகுதியின் பிரதிநிதியாகவும், அரசங்கசபைத் தலைவராகவும் விளங்கிய சோ. வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களாலும் 17-01-1946 இல் அரசினர் கனிஷ்ட ஆங்கில வித்தியாலயம் (Government Junior English) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இன்றைய புங்குடுதீவு மகா வித்தியாலயம்.

எமது கிராமத்தில் ஆங்கிலப்பாடசாலையை உருவாக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்களிலே அன்றைய கிராமத்தலைவர் திருவாளர் வ.பசுபதிப்பிள்ளை, திருவாளர் ஆ. சரவணமுத்து உடையார்,  திருவாளர். கு.யோகுப்பிள்ளை, திருவாளர். க. அம்பலவாணர் ஆகியோர் காலத்தால் போற்றப்படவேண்டியவர்கள்.இவ் வித்தியாலயத்தை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டதனால் 17-01-1946 இல் புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாலயத்தின் ஒரு பகுதி கட்டிடத்தில் 150 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடசாலை புங்குடுதீவின் மத்தியிலே அமையவேண்டுமென விரும்பிய திருவாளர் க. அம்பலவாணர் அவர்கள் புங்குடுதீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சந்தையடியிலுள்ள தனது காணியை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்தார்.

இக்காணியில் உள்ளூர் மக்களினதும், தனவந்தர்களினதும் நிதி, பொருள் உதவியுடன் இப்பாடசாலைக்கு ஓர் நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டதுடன் 03-03-1948 இல் இப்பாடசாலை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டது. அரசினால் ஆங்கில மொழிக் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இவ் வித்தியாலயம் பின்னர் அரசின் சுயபாஷை கல்வித்திட்டத்திற்கு அமைய கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது.இங்கு 6 தொடக்கம் 13 வரை வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இப்பாடசாலையின் ஆரம்பகால அதிபராக திரு கே. எம். தம்பையா அவர்கள் குறிப்பிடப்படுகிறார். இவர் 15-09-1948 இல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்து இதனுடாக பெற்றோர் ஒத்துழைப்பை பெற்று பாடசாலை வளர்ச்சிக்கு உதவியிருந்தார். இக்காலத்தில் சங்கீதம், நெசவு, தையல் போன்ற மேலதிக விசேட பாடங்கள் கற்பிக்கப்பட்டன.இவருக்கு பக்க பலமாக திரு. சு. வில்வரத்தினம், பண்டிதர் மு.ஆறுமுகம், திரு என். அருணாச்சலம், திரு என். இராசரெத்தினம், திரு ரி. அம்பலவாணர், திரு சி. முத்துக்குமாரசாமி, திருமதி. தா. யோகாம்பிகை, செல்வி தி. ஞானபூரணி போன்ற உதவி ஆசிரியர்கள் இருந்துள்ளனர். 1953 இல் முதன் முதலாக சிரேஷ்ட பாடசாலை தராதரா பத்திர பரீட்சசைக்கு (S.S.C Examination) இங்கிருந்து மாணவர்கள் தோற்றியுள்ளனர். இப்பரீட்சயில் சித்தியடைந்த முதல் மாணவனாக செல்வன் ஆர். கனகலிங்கம் குறிப்பிடப்படுகின்றார்.  

இவரைத்தொடர்ந்து 01-04-1955 இல் திரு சு. விவேரெத்தினம் அவர்கள் இப்பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டார். இக்காலத்திலே 04-04-1955 இல் இப்பாடசாலை ஒரு நேரப்பாடசாலையாக மாற்றப்பட்டதுடன் பாடசாலைக் காணி விஸ்தரிக்கப்பட்டு விளையாட்டு மைதானம் விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.1960 இல் இப்பாடசாலையில் இருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரணதர) பரீட்சசைக்கு (G.C.E O/L Examination) தோற்றிய மாணவர்களில் எண்மர் சித்தியடைந்தனர்.

இப்பாடசாலை 01-01-1998 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது.சைவ மாணவர்களுக்கான வழிபாட்டரை, வகுப்பறை கட்டிடம், உட்புற திறந்த வெளியரங்கு, கிணறு போன்றன அமைக்கப்பட்டன. இக்காலத்தில் 419 மாணவர்கள் கல்வி கற்ற அதேவேளை 15 ஆசிரியர்கள் கல்வி கற்பித்துள்ளனர்.

திரு சு. வில்வரெத்தினம் அவர்களைத் தொடர்ந்து 01-01-1963 இல்  திரு வி. சோமசுந்தரம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இவரது சேவைக்கலாம் குறுகியதாக காணப்பட்டது.

பின்னர் 01-01-1964 இல் முன்னைய அதிபரான திரு வி. வில்வரெத்தினம் அவர்களே மற்ரண்டும் அதிபராக கடமையாற்றினார்.இக்காலத்தில் பாடசாலை மட்ட இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன்.இதற்கு பொறுப்பான திரு சி. செல்லையா ஆசிரியரின் பணி மிகவும் மகத்தானது.

1962 இல் இப்பாடசாலை மாணவனான செல்வன் சி. தனபாலசுந்தரம் அவர்களால் 100 மீற்றர், 200 மீற்றர் குறுந்தூர ஓட்டங்களில் மாவட்ட சாதனைகள் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தவர்களிலே திரு அ. க. கந்தையா (கன்னையா) திரு இ. குலசேகரம்பிள்ளை, திரு சி. மாணிக்கம், திரு க. தாமோதரம்பிள்ளை, திருமதி ம. யோ. பூராட, திருமதி ந. இராசரத்தினம், திருமதி பொ. விஜயரத்தினம், திருமதி க. வடிவேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

திரு சு. விவரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல 19-07-1967 இல் இப்பாடசாலை அதிபராக திரு சி. இராசநாயகம் நியமிக்கப்பட்டார்.

திரு சு. வில்வரெத்தினம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல 19-07-1967 இல் இப்பாடசாலை அதிபராக திரு சி. இராசநாயகம் நியமிக்கப்பட்டார். இக்காலக்கட்டத்தில் பாடசாலையில் உயர்த்தாரா வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கான சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலப் பகுதியில் புங்குடுதீவு கல்வி வளர்ச்சிக் கலகம் இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலே கவனம் செலுத்தி பாடசாலைக்கு விஞ்சான உபகரணங்கள், தளபாடங்கள், வாயுப்பிறப்பாக்கிகள், தட்டச்சுப்பொறிகள், ரோனியோ இயந்திரம் போன்றன அன்பளிப்பு செய்ய்யப்பட்டன. இச்சேவைகளை வழங்கிய கல்வி வளர்ச்சிக் கழகத்தலைவர் திரு  க. மதியாபரணம் ஜே பி அவர்களும் செயலாளர் திரு சு.யோ. பூராசா அவர்களும் என்றும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பின்னர் 01-08-1968 இல் திரு இ. சச்சிதானந்தம் அவர்கள் இப்பாடசாலை அதிபராக நியமனம் பெற்றார்  . இவர் விளையாட்டுத்துறையை வளர்த்தது மட்டுமன்றி பாடசாலயில் பூமரங்களை நாட்டி பாடசாலை சூழலை அழகு படுத்தியவர். இக் கால பகுதியில் திரு. மு. தளையசிங்கம் திரு பொன் கனகசபை, செல்வி ந குழந்தை வேலு போன்றோர் உயர்தர வகுப்பில் கல்வி கற்பித்த ஆசிரியர்களாவர்.

திரு கு. சச்சிதானந்தத்தை தொடர்ந்து 01.07.1970 இல் திரு கு வி செல்வதுரை அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக புங்குடுதீவை சேர்ந்த கொழும்பு பிரபல வர்த்தகர் திரு நா. க. மயில்வாகனம் அவர்களின் நிதியில் (ரூபா 25,000) இப்பாடசாலைக்கு கிணறு அமைக்கப்பட்டதுடன் இப்பாடசாலை மாணவன் செல்வன் வே. சத்யகுமார் (உயரம் பாய்தல்) செல்வன் மு. அரியராசா (200 மீற்றர்) ஆகியோர் அகில இலங்கை மெய்வல்லுனர் பங்குபற்றினர்.

02-01-1972 இல் இப்பாடசாலை உதவி அதிபரான திரு மு. இராமலிங்கம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இக்காலகட்டத்திலே க.பொ.த உயர்தர விஞ்சான, வர்த்தக பிரிவுகள்  ஆரம்பிக்கப்பட்டதுடன். விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டது.

பின் 14-03-1973 இல் இப்பாடசாலையின் அதிபராக திரு க. மயில்வாகனம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றார். இவருடைய காலத்தில் இருமாடிக் கட்டிடம் அமைப்பதற்கான அத்திவாரம் இடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 19-10-1973 இல் இப்பாடசாலை அதிபராக பண்டிதர் வீ.வ. நல்லதம்பி அவர்கள் நியமனம் பெற்றார் . இவரது காலத்திலே இருமாடிக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன் (17-03-1975 இல் ) வெள்ளி விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதோடு மின்சார வசதியும், மாணவ தலைவர் இலச்சினை, “ரை” அணியும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1976 இல் வர்த்தக மையம், கோழிப்பண்ணை போன்றன அமைக்கப்பட்டன. புங்குடுதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் வாயுப்பிறப்பாக்கிகள் அன்பளிப்பு செய்யப்பட்டு 1978 இல் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இயக்கி வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மாணவர்களுக்கான பிரார்த்தனை மண்டபம் பெற்றோரின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டது. திருமதி மே. தி. வசந்தகுமார் ஆசிரியை இதற்கு பக்கபலமாக இருந்தார். 737 மாணவர்களும் 26 ஆசிரியர்களும் இக்காலத்தில் இருந்ததுடன் திரு . த. சிவகுரு அவர்கள் பிரதி அதிபராக கடமையாற்றினார்.

23-10-1980 இல் மீண்டும் திரு சி. இராசநாயகம் அவர்கள் பாடசாலை அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் நியமிக்கப்பட்டார். புங்குடுதீவை சேர்ந்த  கொழும்பு பிரபல வர்த்தகர் திரு பா. பாலசுந்தரம் அவர்கள் தனது தந்தையான அமரர் பொன்னையா பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பரிசளிப்பு நிதியாக ரூபா. 15,000 வைப்பு செய்யப்பட்டு இன்று ரூபா 80,000 ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வி திணைக்களத்தினால் மரவேலை கூடம் அமைக்கப்பட்டது.

01-03-1983 இல் திரு க. செல்லத்துரை அவர்கள் பாடசாலை அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் நியமனம் பெற்றார். மனையியல் கூடம் ஒன்றும், வகுப்பறை கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிதியுதவியினால் பாரிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது (2500 கலன்). பாடசாலை சிரேஷ்ட மாணவர் இடம் பெயர்ந்த மக்களுக்கு பொருட்களை வழங்குவதற்கு மாபெரும் நாடகவிழா நடத்தப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில் திரு ஐ. சண்முகநாதன், திரு ந. தர்மபாலன், திரு த. கருணாகரன், திரு செ. ஈஸ்வரமூர்த்தி, திரு ந. கலைநாதன், திரு இ. ஜெயசீலன்,  திருமதி மே. தி. வசந்தகுமார், திருமதி ம. இராமச்சந்திரன் போன்ற ஆசிரியர்கள் பாடசாலை வளர்ச்சியிலே பங்காற்றினார்.  

15-06-1987 இல் திரு ஏ. சி. நல்லையா அவர்கள் பாடசாலை அதிபராகவும், புங்குடுதீவு கொத்தணி அதிபராகவும் நியமனம் பெற்றார். இவரது காலத்தில் சத்துணவு திட்டம் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைக்கப்பட்டதுடன். 115 அடி  நீளத்திற்கு புங்குடுதீவு பிரபல வர்த்தகர்  திரு சந்திரன் அவர்களால் பாடசாலை முன்புற மதில் அமைக்கப்பட்டது. இக்காலத்தில் பிரதி அதிபராக திரு ந. தர்மபாலன் அவர்கள் கடமையாற்றினார்.

26-05-1990 இல் திரு க. பேரம்பலம் அவர்கள் பாடசாலை அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் நியமனம் பெற்றார். இக்காலப்பகுதியில் பாரிய இடப்பெயர்வினால் புங்குடுதீவு பாடசாலை பதினைந்தையும் யாழ் நகரிலே ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here