புங்குடுதீவு வரதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் கொட்டடியை நிரந்திர வதிவிடமாகவும், கொழும்பு 897, 2/6 அளுத் மாவத்தை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 15.07.2009 அன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார், அமரர்களான முருக்குப்பிள்ளை பூரணப்பிள்ளையின் மகனும், காலஞ்சென்ற மருதையினார் நாகம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற கண்ணம்மா(லட்சுமி) வின் அன்புக்கணவரும், சந்திரபாலன்(கனடா), கனகேஸ்வரி(இலங்கை), கோமளா(கனடா), சத்தியா(கனடா) ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.
அன்னார், கிருஷ்ணவதி(கனடா), விக்னேஸ்வரன்(இலங்கை), தாமோதரம்பிள்ளை(கனடா), கருணாமூர்த்தி(ராசன்.கனடா) ஆகியோரின் அருமை மாமாவும், அமரர்களான சோமசுந்தரம், நாகம்மா, செல்லாச்சி ஆகியோரின் சகோதரரும், கமலேஸ்வரி காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, கனகசபை, புவனேஸ்வரன் மற்றும் கனகம்மாவின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின், பூதவுடல் 16-07-2009 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
s.மனோகரன் – இலங்கை 0094 112540826
s.சந்திரபாலன் – கனடா 001 4162416972