திரு தவராசா ஆசிரியர்

0
683
புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக முன்பள்ளி
புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக முன்பள்ளி

திரு தவராசா ஆசிரியர் மிகவும் மதிப்புக்குரியவர். ஆசிரியத்தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்பும் சமூகத்தொண்டு சைவத்தொண்டு என பல்வழிகளில் தன்பணி செய்து வரகிறார். முக்கியமாக எமது ஊரில் சுபகாரியங்கள் மற்றும் அபரக்கிரியைகளில் அவர் எல்லோருக்கும் தனது அனுபவஆற்றலாலும் ஆசிரியப்பண்பாலும் சொல்லி வழிகாட்டும் நிலை உண்மையில் மெய்சிலி்ர்க்க வைக்கிறது. தவராஜா ஆசிரியர் நின்றால் எந்தக்கருமமும் இலகுவாக நிறைவேறும். கைமாறு எதிர்பார்க்காமல் செய்யும் தொண்டு. அவர்களுக்கு அடுத்த சிஸ்யர்கள் உருவாகாது கவலையான விடயமாகும். எளிமையான வாழ்வு, சின்ன மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று வரும் அந்த ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியாது. இவரை போண்றவர்களை ஊர் பெற்றெடுத்ததற்கு பெருமைப்படுகின்றேன். வாழ்க பல்லாண்டு.

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here