திரு நாகலிங்கம் சச்சிதானந்தன்
தோற்றம் : 4 மே 1946 — மறைவு : 28 ஏப்ரல் 2012

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சச்சிதானந்தன் அவர்கள் 28-04-2012 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசிரியமணி நாகலிங்கம்(ஆசிரியர்), காலஞ்சென்ற மனோன்மணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, சற்குணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகி(ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஈசானந்தன்(தளபதி – கனடா), பிரபாகரன்(கனடா), கோமகள்(இலங்கை), புஸ்பாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உஷா(கனடா), திருநாவுக்கரசு(இலங்கை), இந்துநேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரானந்தன், காலஞ்சென்ற லலிதாம்பிகை, புனிதவதி, சிவஞானவதி(கனடா), சரஸ்வதி, கலாவதி(கனடா), ரூபாவதி, சதானந்தன், சிவானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வநாயகி, காலஞ்சென்ற திலகநாயகி, வள்ளிகாந்தன், கௌரிகாந்தன், காலஞ்சென்ற லக்ஸ்மிகாந்தன், தெய்வநாயகி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சன், யுவராஜ், யுகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 30-04-2012 திங்கட்கிழமை அன்று முற்பகல் 6:00 தொடக்கம் பிற்பகல் 4:00 வரை கொழும்பில் அமைந்துள்ள ஜெயவர்த்தன Funeral home இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஈசானந்தன் – மகன்
தொடர்புகளுக்கு
ஈசானந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16478878414
புஸ்பா — இலங்கை
தொலைபேசி: +94112981499
செல்லிடப்பேசி: +94777450474
கோமகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777211448

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here