ma ku subramaniam

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மா. கு. சுப்பிரமணியம் அவர்கள் 27.07.2009 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் கிராம அதிகாரியும் விவாக பிறப்பு இறப்பு பதிவாளருமான குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம் பூரணம்(வவுனியா) தம்பதிகளின் மருமகனும், முன்னாள் விவாக பிறப்பு இறப்பு பதிவாளருமான மங்கையற்கரசியின் கணவரும், கிருஷாந், சகீசன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னார், சண்முகநாதன்(லண்டன்), கனடாவை சேர்ந்தவர்களான இராஜேஸ்வரி, சரவணபவான், கோணேஸ்வரி, சிவபாலன், சிவனேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் சகோதரரும், திருச்செல்வம், மகேந்திரன், கௌசலாதேவி(சுவிஸ்), இரஞ்சிதமலர், கேதாரகௌரி(இத்தாலி), லண்டனை சேர்ந்தவர்களான மோகனதாஸ், தயாபரன், திருவருட்செல்வி, சதானந்தன்(வவுனியா), திருவருட்செல்வி(லண்டன்), கனடாவை சேர்ந்தவர்களான பஞ்சாட்சரம், குலசிங்கம், நித்தியானந்தசெல்வன், இராசலட்சுமி, கோமளாதேவி, சுகந்தி ஆகியோரின் மைத்துனரும், பிலோமினா(பபி), சகுந்தலாதேவி, லண்டனை சேர்ந்தவர்களான தேவமனோகரி, சரஸ்வதி, ஆதி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும், விக்னராஜா(சுவிஸ்), ஸ்ரீதரன், சோதிராசா(இத்தாலி)சிவபாலன்(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29.07.2009 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணிமுதல் 9:00 மணிவரை இல-855 Albion Road இல் அமைந்துள்ள Bernardo Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30.07.2009 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் இல-1567 Royal York இல் அமைந்துள்ள Riverside Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
கனடா 001 4169860725
001 4166613806

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here