புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணமூர்த்தி ரதிதேவி அவர்கள் 21.06.2009 அன்று இந்தியா காசியில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமியின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(தபாலதிபர்), கனகம்மா ஆகியோரின் மருமகளும், ரஜனிகாந்(காந்தன்.பிரான்ஸ்), ராதிகா(சுவிஸ்), பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னார், அம்பி, சபீன் ஆகியோரின் மாமியாரும், பராசக்தி(பிரான்ஸ்), இலட்சுமி(இலங்கை), சண்முகராசா(பிரான்ஸ்), ஆனந்தராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிருஷ்சணமூர்த்தி, இராஜராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரியும், நடேசமூர்த்தி(கனடா), கணேசமூர்த்தி((கனடா), கிருஷ்ணமூர்த்தி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவஞானமூர்த்தி, இராஜராஜேஸ்வரி(ராசாத்தி), ராமமூர்த்தி, நாகநாதமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும், சாரா, சரிகா, ரிஷி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் காசியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு
மகன் – பிரான்ஸ் 0033 663969415
மகள் & மருமகன் – சுவிஸ் 0041 787207579
சகோதரி – பிரான்ஸ் 0033 148493850