1980-83 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு பஸ்கள் ஓடின. கேஜீ குணரட்ணத்தின் பஸ்ஓடிய போதும் புங்குடுதீவு கொழும்பு பஸ் என்றால் வாசன் பஸ் சேவை. அதனை மறக்க முடியாது. புங்குடுதீவுக்கு இறந்தவரை பார்க்க வரவேண்டுமாயின் இரவு லொறியில் வருவது. சரியான சிக்கலான பயணம். வாசன் பஸ் வந்த போது காலை 4.30 மணிக்கு வாசன் பஸ் புங்குடுதீவில் வந்து நிற்கும். அந்த பஸ் தற்போதும் புங்குடுதீவில் தரித்து நிற்கிறது. யப்பானில் தயாரிக்கப்பட்டு புண்குடுதீவில் மண்ணாகிறது. எமது புங்குடுதீவு மண்ணில் பிறந்தவர்கள் வெளிநாடுகளில் மண்ணாகிறார்கள்.