கனகரத்தினம் மகேஸ்வரன்

citronella-candle-in-the-backyard

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை பெர்னாந்து மாவத்தையில் வசித்து வந்தவருமாகிய கனகரத்தினம் மகேஸ்வரன் அவர்கள் 26-10-2008 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்(ஆசிரியர்) பராசக்தி தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதியினரின் மருமகனும், சரஸ்வதியின் அன்புக்கணவரும், கபில்தேவன்(லண்டன்), அருண்பிரகாஷ், வினோத்காந்த் ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.

 

அன்னார், மனோரஞ்சினி, மனோகரன், அருள்ராசா, கிருபாகரன்(பொறியியலாளர்), வைத்தியமாலா, சிவதாசன், மதிரூபன் ஆகியோரின் அன்புச்சகோதரரும், பரமேஸ்வரன், காலஞ்சென்ற மகேஸ்வரிதேவி, மேனகராணி, பஞ்சலிங்கம், மகாலிங்கசிவம், மகேந்திரன் ஆகியோரின் மைத்துனரும், சிவராமலிங்கம், ஞானவதி, சிவமதி, மஞ்சுளாதேவி, சண்முகலிங்கம், வசந்தமலர்ச்செல்வி, தயாநிதி ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற யோகநாதன், புவனேஸ்வரி, கோபாலசிங்கம், ரஞ்சி, நகுலேஸ்வரி, மல்லிகாதேவி(ஆசிரியை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 28-10-2008 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 29-10-2008 புதன்கிழமை அன்று 2:00 மணியளவில்  ஈமக்கிரியைகள் நடைபெற்று, 4:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here