வட இலங்கை புங்குடுதீவு சர்வோதய இயக்கத்தின் அறங்காவலரும், அருள்நிதியும், சமாதான நீதிவானும் ஆகிய செல்வி. பொன்னம்பலம் ஜமுனாதேவி அவர்களுக்கு, பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் முகமாக சர்வோதய வளாகத்தில் அமைக்கப்பட்ட புங்குடுதீவு உணவு உற்பத்தி நிறுவணம் P.F.M யின் வளர்ச்சிக்காகவும், COVID 19, காலப்பகுதிகளில் இவ் நிறுவணப்பணிகளை தொடர்ந்து நடாத்தி, மக்களுக்கு உதவியமைக்காகவும், 23 உணவு உற்பத்தி உலருணவு பொருட்களை 24 பெண்களைக் கொண்டு தொடர்ந்து நடாத்தி வருகின்றமையைப் பாராட்டியும் (08.03.2021) அன்று மகளீர் தினத்தை முன்னிட்டு Colombo Water Edge Grandball மண்டபத்தில் சாதனையாளப் பெண்ணாக இலங்கை அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.சர்வோதய வளாகத்தில் அறுபதிற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு, தொண்டர் திருவாள் உருவாக்கப்பட்ட சர்வோதய அமைப்பு விருட்சமாக வளர்ந்து நிற்பதற்கு செல்வி பொன். ஜமுனாதேவி அவர்களின் பங்களிப்பு மகத்தானதும், பாராட்டுதலுக்குரியதாகும்.

அவருக்கு வழங்கப்பட்ட விருது எம் கிராமத்திற்கும், நம் தமிழ் சமூகத்திற்கும் பெருமைக்குரியதாகும். எங்கள் உலருணவு பொருட்கள் உள் நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

இந்த அரும்பெரும் செயற்திட்டத்தை செயல்படுத்தி வளம்படுத்திக் கொண்டிருக்கும் பொது முகாமையாளர் செல்வி பொன். ஜமுனாதேவி அவர்களையும், பணியாளர்களையும் நெஞ்சார வாழ்த்தி நிற்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here