புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் புங்குடுதீவு உறவுகள் அனைவருக்கும் வேலணை பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரித்தல் தொடர்பானது. புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின் கவனத்திற்குரியது. 14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உரிமையாளர்களின் விபரம்:

  1. குமாரவேலு பொன்னம்மா
  2. சின்னத்தம்பி இராசேந்திரன்
  3. சுப்பிரமணியம் மகேஸ்வரி
  4. அண்ணாமலை கங்காசபை
  5. ஐயம்பிள்ளை பாக்கியம்
  6. வேலாயுதபிள்ளை செல்லம்மா
  7. கந்தையா தியாகராசா
  8. இராசையா கோணேசலிங்கம்
  9. பஞ்சாசரம் தயாபரன்
  10. செல்வராசு அம்பிகா

தகவல்:
கிராம சேவகர்
J23 J24
புங்குடுதீவு தென்கிழக்கு

கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் , புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இக்காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தபோதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி ( தீவகம் ) கிளையினர் மேற்கொண்டிருந்த பலதரப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருந்தன . இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஒரு வாரத்திற்குள் ( நவம்பர் 22 ம் திகதி ) வேலணை பிரதேச செயலகத்தினர் ஊடாக இவ்வாறான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது . ஆனாலும் நாங்களே தற்போதுதான் அறிந்துள்ளோம் . அதாவது இவ்விடயமானது அரசினாலும் , அரச அதிகாரிகளாலும் திட்டமிட்டு பொதுமக்களிடத்தில் மறைக்கப்பட்டுள்ளமை அப்பட்டமாக தெரிகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here