வல்லன் மார்க்கண்டு சோதிநாதர் அவர்களால் 1925ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட பாடசாலை ஸ்ரீசண்முகநாதன் வித்தியாசாலையாகும்.
1962 இல் அரசால் பொறுப்பேற்கப்பட்டு பல சாதனைகளை நிலை நாட்டிய பாடசாலை.
1973ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியில் சிறப்புப்பரிசு பெற்றது.
இதேயாண்டு சாம்பிராட் அசோகன் எனும் நாடகம் சிறந்த பரிசு பெற்றது. மெய்வல்லுனர் போட்டியில் சிறந்த பெறுபேறு. உலகநாதன் அண்ணை பெரிய காலால் ஓடி சாதனை படைத்தது ஞாபகமிருக்கிறது. நான் இந்தப்பாடசாலையில் 1073-1977 வரை படித்தேன் நாகரத்தினம் (கந்தசாமி) அவர்கள் அதிபராக இருந்த காலம் 1976இல் 4ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது தனியே கூப்பிட்டு அடுத்த வருடம் யாழ்ப்பாணம் படிக்க போகிறாய் என்ன உன்னுடைய கணித பாடநிலை என்ற கண்டிப்பு என்னை உயர்தத்தி வைத்தது.
நான், ஞானச்சந்திரன், நவரஞ்சன், நகுலேஸ்வரன் எங்களுக்குள் சரியான போட்டி நான் அவர்களை விட்டு பிரிய ஜெனகன் வந்து சேர்ந்தான். அந்த வகுப்பு சண்முக நாதன் பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை கொடுத்துது. அதன் பயனாக விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டது. நடராசா வாத்தியார் பின்னாள் அதிபர் அவர் கண்டிப்பான ஆசிரியர் நாங்கள் அவரை சுருட்டு வாத்தியார் என செல்லமாக அழைப்பதுண்டு. அவரின் வழிகாட்டலில் பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றனர்.
1986-1987 காலப்பகுதியில் இந்த பாடசாலையில் தொண்டு அடிப்படையில் கல்வி கற்பித்தேன். நான் திருநாவுக்கரசு வாத்தியார் என்பருடன் கூட்டாக ஆசிரியர்களின் முயற்சியால் 4 டீ 4சி (அப்ப டீ,சி,எஸ்,எப்) தாராதரம். சிறப்பு குறட்செல்வன் அந்த சாதனையை நிலை நாட்டினான். 3டீ, 3டீ.1 டீ என பல சாதனைகள் எனது விஞ்ஞானம்,சுகாதாரம், விவசாயம் படிப்பித்த பாடங்கள் டீ சித்தி பெற்றது என்னை பிரபல விஞ்ஞான ஆசிரியராக்கியது கதை வேறு. இன்னும் பல நண்பர்கள் பகிர்வார்கள்.
தகவல் Sritharan Ganesh