சீ சுப்பிரமணியக்குருக்கள்

0
28

சிவஶ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், சீ புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமயப் பெரியார். இவர் தனது இளமைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் பின்னர் முன்னேஸ்வரம் ஆலயத்தோடு அமைந்திருந்த வேதாகமப் பள்ளியிலும் குருகுலவாசம் செய்து சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றைப் பயின்று குருபட்டம் பெற்றார்.

புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் ஆரம்பகாலப் பூசகராகக் கடமையாற்றியதோடு சந்தையடி பிள்ளையார் கோவில், வைரவர் கோவில் போன்ற கோவில்களிலும் பூசகராக இருந்தார். இவர் பக்தி நயம் மிக்கவராகக் காணப்பட்டார்.

சுப்பையா ஐயா என ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவரது அமைதியான சுபாவமும் ஆடம்பரம் இல்லாத போக்கும் எல்லோருக்கும் பிடிப்பவையாக இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here