புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தில், எதிர்வரும் 29.01.2026 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள 7ம் திருவிழாவும், அம்பாள் குடிகொள்ளும் புதிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த “புதிய மஞ்ச வெள்ளோட்ட விழாவும்” வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
நிகழ்வு விபரங்கள்:
🗓 திகதி: 29.01.2026 (வியாழக்கிழமை)
🕘 காலை 7:00 மணி: விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
🕐 பகல் 1:00 மணி: புதிய மஞ்ச வெள்ளோட்ட விழா நடைபெறும்.
🕖 மாலை 7:00 மணி: வசந்தமண்டப் பூஜையை தொடர்ந்து, மஹாலட்சுமி வள்ளி தேவசேனா சமேத முருகனுடன் பஞ்சமுக விநாயகப் பெருமான் எழுந்தருளி, புதிய திருமஞ்சத்தில் ஆரோகணித்து வீதிவலம் வரும் அருட்காட்சி நடைபெறும்.
🎺 நாதஸ்வர இசைக்கச்சேரி: காலை மற்றும் மாலை விழாக்களில்,
- தேவானந்தா குழுவினர் (ஆலய வித்வான்கள்)
- ஸ்வரஞான திலகம் இ. சிவகுமார் (தொல்புரம்)
- நாதஸ்வர கலாநிதி பாலமுருகன் குழுவினர் (நல்லூர்)
- நாதஸ்வர இளவரசன் நாகதீபன் குழுவினர் (தாவடி)
- நாதவினோதன் சனா குழுவினர் (வற்றாப்பளை) ஆகியோரின் விசேட மேளக்கச்சேரி நடைபெறும்.
📺 நேரடி ஒளிபரப்பு: காலை மற்றும் மாலை விழாக்கள் ஓம் தொலைக்காட்சி (Om TV) ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இந்த ஆன்மீகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, எம்பெருமானின் அருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு: பரிபாலன சபையினரும், 7ஆம் திருவிழா உபயகாரர்களும்.






