Sunday, September 20, 2026

Related Posts

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம் – புதிய மஞ்ச வெள்ளோட்ட விழா!

புங்குடுதீவு மேற்கு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தில், எதிர்வரும் 29.01.2026 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ள 7ம் திருவிழாவும், அம்பாள் குடிகொள்ளும் புதிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த “புதிய மஞ்ச வெள்ளோட்ட விழாவும்” வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

நிகழ்வு விபரங்கள்:

🗓 திகதி: 29.01.2026 (வியாழக்கிழமை)

🕘 காலை 7:00 மணி: விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.

🕐 பகல் 1:00 மணி: புதிய மஞ்ச வெள்ளோட்ட விழா நடைபெறும்.

🕖 மாலை 7:00 மணி: வசந்தமண்டப் பூஜையை தொடர்ந்து, மஹாலட்சுமி வள்ளி தேவசேனா சமேத முருகனுடன் பஞ்சமுக விநாயகப் பெருமான் எழுந்தருளி, புதிய திருமஞ்சத்தில் ஆரோகணித்து வீதிவலம் வரும் அருட்காட்சி நடைபெறும்.

🎺 நாதஸ்வர இசைக்கச்சேரி: காலை மற்றும் மாலை விழாக்களில்,

  • தேவானந்தா குழுவினர் (ஆலய வித்வான்கள்)
  • ஸ்வரஞான திலகம் இ. சிவகுமார் (தொல்புரம்)
  • நாதஸ்வர கலாநிதி பாலமுருகன் குழுவினர் (நல்லூர்)
  • நாதஸ்வர இளவரசன் நாகதீபன் குழுவினர் (தாவடி)
  • நாதவினோதன் சனா குழுவினர் (வற்றாப்பளை) ஆகியோரின் விசேட மேளக்கச்சேரி நடைபெறும்.

📺 நேரடி ஒளிபரப்பு: காலை மற்றும் மாலை விழாக்கள் ஓம் தொலைக்காட்சி (Om TV) ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த ஆன்மீகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, எம்பெருமானின் அருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாடு: பரிபாலன சபையினரும், 7ஆம் திருவிழா உபயகாரர்களும்.

pungudutivu-veeragathi-vinayagar-new-mancham-festival-2026
Exit mobile version