புங்குடுதீவிலுள்ள பெரிய இறுப்பிட்டி என அழைக்கப்படும் கிராமத்தில் இப் பாடசாலை அமைந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு சில பெரியவர்களின் நல் ஆசியுடன் அமைக்கப்பட்டது.
பசுபதிப்பிள்ளை விதானையார் அவர்களும் திரு வேலாயூதர் விசுவலிங்கம் என்பவரும் மற்றும் சில பெரியவர்களும் ஒன்று சேரந்து நான்கு பரப்புக் காணியை அன்பளிப்புச் செய்து ஸ்ரீ நடராசா ஐயர் அவர்களின் ஆசியுடன் 1914ம் ஆண்டு இப் பாடசாலை திருவாளர் க. நாகலிங்கம் அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு இப் பாடசாலை அமைக்கப்பட்டது.
திருவாளர் வ. பசுபதிப்பிள்ளை அவர்களின் முகாமைத்துவத்தில் இருந்த இப் பாடசாலை 1926ம் ஆண்டு சைவ வித்தியா விடுதிச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இக் கால கட்டத்தில் திரு.ஆறுமுகம் சுப்பிரமணியம் என்பவர் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.