Wednesday, March 25, 2026

ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் (Pungudutivu Sri Ganesha Maha Vidyalayam)

முகவரி / Address: புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம்
அதிபர் / Principal: திரு. சி. கமலவேந்தன்
Telephone: +94 213 209 065
ஆசிரியர்கள்/ Teachers: 15 (2019)
மாணவர் தொகை/ Students : 141 (2019)

பாடசாலை வரலாறு

எமது பாடசாலை 1910 ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 3ம் நாள் அமரர் வைத்தியலிங்கம் பசுபதிப்பிள்ளை அவர்களினால் மூத்ததம்பியர் வளவில் அரச மரநீழலில் ஓலைக்குடிசையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் அரச நன்கொடை பெறும் பாடசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெற வேண்டுமாயின் நிரந்தரமாக பாடசாலைக்கென சொந்தமான காணியில் நிரந்தர கட்டிடத்துடன் பாடசாலை அமைய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அந்நிலையில் கனகசபையார் இராமநாதரின் மகன் அப்பச்சியர் ( திருமதி சுப்பிரமணியம் சிவக்கொழுந்து அவர்களின் தந்தை) தற்போது எமது பாடசாலை அமைந்துள்ள இடத்தில் தமது காணியில் முன்புறமாக மூன்று பரப்புக் காணியை நன்கொடையாக வழங்கினார் .

அதன்பயனாக1914 ஆம் ஆண்டு தற்போதைய இடத்தில் பாடசாலை ஆரம்பமாகியது. எமது பாடசாலையின் துரித வளர்ச்சியினால் இம்மூன்று பரப்புக் காணிக்குள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 1979ஆம் ஆண்டளவில் திரும்பவும் அப்பச்சியரின் வழித்தோன்றலாகிய அவரின் பேத்தியார் திருமதி யோகாம்பிகை தர்மலிங்கம் அவர்களைப் பாடசாலை நிர்வாகத்தினர் அணுகினர்.அவர்களும் முழு மனதுடன் சில நிபந்தனைகளோடு தமது காணி முழுவதுமாக பாடசாலை க்கு கொடுப்பதற்குச் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிரகாரம் பாடசாலை க்கு வடக்கு பகுதியில் உள்ள அமரர் க.வைத்திலிங்கம் அவர்களது காணியை வாஙகிக்கொடுத்து அவர்களது காணி பாடசாலையுடன் இணைக்கப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க