இங்கு காண்பது புங். இராஜேஸ்வரி வித்தியசாலையாகும். 1931 புரட்டாதி விஜயதசமியன்று ஒலைக்குடிசையாக உருவாக்கப்பட்டது.. பின் கொழும்பு வர்த்தகர்களால் பாடசாலை ஒழுங்கமைக்கப்பட்டது. பாடசாலைக்கு சேதுபதி முதல் கணபதிப்பிள்ளை, நடராசா, பொன்னம்பலம், தனபாலசிங்கம் என்பவர்கள் இடம்பெயர முன் பாடசாலைக்கு தலைமை அதிபர்களாக இருந்தனர்.

தனபாலசிங்கம் காலத்தில் பாடசாலை சகலதுறைகளிலும் சிறப்புற்று விளங்கியது. இக்காலத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட போது திு த.கிருஸ்ணசாமி அவர்கள் காணி வாங்கிக்கொடுத்தார். பின் பெற்றேர்களும், ஊர் பொதுமக்களும் பாடசாலையைச்சுற்றி மதில் கட்டிக் கொடுத்தனர்.

தற்போது இப்பாடசாலை இங்குள்ளவர்களின் முயற்சியால் இயக்கப்பட்டபோது இங்கு காணப்படும் வினைத்திறனான அதிபர் திரு. ஸ்ரீதரன் அவர்கள் உண்மையில் இந்த ஊரைச்சாராதவர் இப்பாடசாலையை முடிந்தளவுக்கு நல்ல மற்ற பாடசாலைகளுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து செயற்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.

புங். இராஜேஸ்வரி வித்தியசாலை
புங். இராஜேஸ்வரி வித்தியசாலை

இங்கு மலசலகூட வசதிகளுக்கு ஆளுனர் செயலகத்தினூடாக செயற்திட்டம் கொடுக்கப்பட்டு இந்த வருடம செயறபடுத்தபபடவுள்ளது. அதிபர் எல்லோரிடமும் சென்று உதவிகள் கேட்டு பாடசாலையை வளமிக்கதாக ஆக்கியுள்ளார். உண்மையில் வேறு ஊரவன் இந்த இடத்தில் இப்படி செய்கின்ற போது நாங்களும் உதவி செய்தால் இன்னும் நன்றாக வரும் ஒரு கை தட்டி ஓசை கேட்காது.

கல்வி என்பது எமது மூலதனம். தயவுகூர்ந்து இந்தப்பாடசாலைக்கு சரஸ்வதி சிலை வைப்பதற்கு ஆசைப்படுகிறார். கலட்டி பிள்ளையார் கோயிலடியில் சிற்பாசாரிகள் வேலை செய்கிறார்கள். இன்னும் சிறிது காலதத்தில் அவர்கள் போய்விடுவார்கள்.

தயவு கூர்ந்து முப்பது ஆயிரம் ருபா மட்டும் செலவாகும் யாரோ ஒருவர் அல்லது மேற்பட்டவர்கள் தயவு கூர்ந்து உதவினால் இக்கைங்கரியத்தை செய்யமுடியும் எனஅவர் கருதுகிறார்.

அடுத்து பாடசாலைக்கு வயரிங் வேலை, போட்டோகொப்பி மெசின், பாடசாலைக்கு பின்புறம் மதில் கட்டப்படவேண்டிய தேவையுள்ளது. இவை நிறைவேறினால் பாடசாலையின் பௌதீக வளம் பெறும் கற்றல் கற்பித்தல் இலகுவாகும் இந்தப்பாடசாலை பழைய மாணவர்கள், அபிமானிகளை வேண்டுகின்றோம்.

அதிபரின் தொ.பேசி- 0094 776720902 மற்றும் ஈமெயில் ska_niiroma@yahoo.com
www.pungurrtmv.sch.lk என்பவற்றில் தொடர்பு கொள்ளவும். பாடசாலையில் உங்கள் சந்ததியின் வரலாறு காலம் காலம் பதியப்படவேண்டுமாயின் பாடசாலையை வளப்படுத்துங்கள்.
நன்றி
அன்புடன்
ஸ்ரீ

தகவல் Sritharan Ganesh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here