இது புங்குடுதீவு மகாவித்தியாலயம் இதைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் எமது கிராமத்தின் எல்லா பாடசாலைகளுக்கும் தலமைப்பாடசாலை.
எமது புங்குடுதீவின் புகழை பரப்பும் பாடசாலை. இங்குள்ளவர்கள் செய்த சிறு தவறு இந்தப்பாடசாலையில் இருந்த முதன்முதலாக பல்கலைக்கழகம் (பேராதனை) தெரிவாகியவர் இவர் பெயர் பழனிவேலு சுந்தரலிங்கம் வீராமலையைப் பிறப்பிடமாக கொண்டவர் யாழ் கச்சேரியில் திட்டமிடப்பணிப்பாளராக இருந்தவர், திருகோணமலை கச்சேரியில் திட்டமிடல் பணிப்பாளராக பதவி வகித்தவர். இவரை கொண்டு இந்தப்பாடசாலைக்கு எத்தனையோ வேலைகள் செய்திருக்கலாம்.
அவரருக்கு லேபிள் இல்லாதது தான் காரணம் இந்த இலங்கையில் வாழ்நாள் சேவை செய்த மனிததனை கௌரவிக்கவில்லை. இனியாவது கௌரவிப்பார்களா. ஈஸ்ரன் விளையாட்டுக்கழகம் கடந்த வருடம் புங்குடுதீவில் தாங்கள் நடாதத்திய விழாவில் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. சரி அது போகட்டும் இந்தப்பாடசாலையில் மகிந்தோதைய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கட்டப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் இந்த கற்கைநெறியை கற்று இந்த ஊருக்கும் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. இந்த வருடம் கல்வித்திணைக்களம் 4 மில்லியன் ரூபாய்களை மகாவித்தியாலயத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. இதவில் பாடசாலையை நகர்புற பாடசாலைக்கு ஈடாக கட்டியெழுப்புவது.
ஆசிரியர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது. அந்தக்காலத்தில் ஊர் வாத்தியார்கள் இருந்ததால் பாடசாலை வளம் பெற கல்வி சிறப்பாக இருந்தது. இப்போது விடுதி அமையும் பட்சத்தில் ஏனைய பாடசாலை ஆசிரியர்களும் தங்கலாம். எனவே அவர்களை நாம் மழுமையாக பயன்படுத்தும் போது எமது மாணவர்களின் கல்வி மேம்படும். அடுத்து வாசிகசாலை நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
இந்த கைங்கரியத்திற்கு வித்திட்ட ஆளுனர் செயலாளர் ஊரவன் இலட்சுமணன் இளங்கோவன் அவர்களுக்கு எமது மண் சார்பாக வாழ்த்துகின்றோம்.
அது மட்டுமன்றி சர்வோதய யமுனா அவர்களுக்கும் நாம் நன்றிகூற வேண்டும். அவரின் வாயில் உதிக்கும் வார்த்தைகள் புங்குடுதீவு வேலைத்திட்டம் தான்.
இன்னுமொரு விடயம் கால்நடைத்திணைக்களம் காசு ஒதுக்கியிருகக்கிறது. இதன் மூலம் பால் கொள்வனவு, விற்பனை நிலையம் உருவாக்கப்படவுள்ளது. சந்தையடி பொது இடம் இதனால் இங்கு பால் உற்பத்தி பெருகும், வருமானம் அதிகரிக்கும் , பால் உற்பத்திப்பொருட்கள் தொழிற்சாலை உருவாகும்.
தகவல் Sritharan Ganesh