தீவகத்தின் வரலாற்றில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள கடினப்பந்து கிரிக்கெட் மைதானமே இது . யாழ் மாவட்டத்திலேயே பல பிரபல கிரிக்கெட் கழகங்கள் காணப்பட்டாலும் அவற்றுக்கு இவ்வாறான மைதானம் அமைந்திருக்கவில்லை . சென் ஜோன்ஸ் , சென்றல் , இந்து கல்லூரி , பற்றிக்ஸ் , மற்றும் ஏனைய சில பாடசாலைகளிலுமே இவ்வகையிலான கடினப்பந்து மைதானம் காணப்படுகின்றது .

தீவகத்தில் தொழில்சார் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் எமது சிந்தனையில் புங்குடுதீவில் உருவாகியுள்ள தீவக கிரிக்கெட் கழக மைதானமே இது . இதுவரை தீவகம் சார்ந்து பல அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியிலிருந்தும் இளைஞர்களுக்கு அவசியமான இவ்வாறான ஒரு விளையாட்டு மைதானத்தினையோ , ஆடுகளத்தினையோ உருவாக்க எண்ணியிருக்கவில்லை .

இந்த கடினப்பந்து ஆடுகளத்தினை ( pitch ) உருவாக்குவதற்காக மாத்திரம் இரண்டு இலட்ச ரூபாயினை உள்ளிட்டுள்ளேன் . மேலும் படத்தில் காணப்படுகின்ற சாக்கிலானான மேல் விரிப்பினை ( ரூபாய் 60000 ) சுன்னாகம் ஊரெழு பகுதியை மகாலிங்கம் கனிஸ்குமார் ( Kanees Kumar ) அன்பளிப்பாக வழங்கியிருக்கின்றார் . அவரது சகோதரரான மகாலிங்கம் சசிக்குமார் ரூபாய் 70000 பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை தீவக கிரிக்கெட் கழகத்தினருக்கு வழங்கி உதவியுள்ளார் .

புங்குடுதீவினை சேர்ந்த மாகோ சின்னத்தம்பி பவுண்டேசன் நிறுவுனரான திரு .சி . கனகலிங்கம் ஐயா ( Kanex Sinna ) அவர்களும் 75000 ரூபாவினை விளையாட்டு உபகரணங்களின் கொள்வனவுக்காக வழங்கி உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

அதேபோன்று விளையாட்டு உபகரண கொள்வனவுக்காக புங்குடுதீவு உலகமையத்தின் பிரிட்டன் ஒருங்கிணைப்பாளர் அன்புக்குரிய சிவகணேஷ் அண்ணா ( Ratna Sivasachin ) அவர்களும் ரூபாய் 15000 வழங்கியிருந்தார் . இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளும் எமது இந்த புதிய முயற்சிக்கு அளப்பரிய உதவிகளை ஆற்றியுள்ளனர் . கடந்த சில நாட்களாக நாங்கள் இவ் ஆடுகளத்தில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் இன்னமும் மைதான புனரமைப்பு வேலைகள் முழுமையாக முற்றுப்பெறவில்லை .

தற்போதைய பருவ மழை பெயர்ச்சியின் பின்னர் அடுத்த வருட ஆரம்பத்தில் மைதானம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படும் . அனைத்து தீவக கழகங்கள் , பாடசாலை மாணவர்களை இணைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு தீவக கிரிக்கெட் அணி உருவாக்கப்படும் .

மேலும் இம்மைதானத்தோடு இணைந்ததாக புங்குடுதீவினை சேர்ந்த சமூக ஆவலர் திரு . சபாரத்தினம் கேதீஸ்வரன் Sabaratnam Kethis அவர்களின் நிதியுதவி ஊடாக மின்னொளியிலான கரப்பந்தாட்ட மைதானமும் ( Bollyball ground ) உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

தகவல் Kunalan Karunagaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here