வாராந்த மதிய போசனம்
கடந்த 3 வருடங்களாக வாரம் தோறும் மாணவர்களிற்கு மதிய போசனம் வழங்கி வருகின்றோம். இதற்கான நடவடிக்கைகளை புங்குடுதீவு சர்வோதயத்தினூடாக மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான செலவுகளை மாதம் தோறும் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் அனுப்பி வருகின்றது. இதுவரை காலமும் சங்க உறுப்பினர்களே இவ்வுதவியினை செய்துகொண்டிருந்தார்கள். இவ் நற்பணியினை தொடர்ந்தும் செய்வதற்கு புங்குடுதீவு மக்களாகிய உங்களுடைய உதவியினையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்