செயற்றிட்டம்

மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன்

(MSS Foundation)

திரு.சின்னத்தம்பி கனகலிங்கம் குடும்பத்தினரால் அவரது தாய், தந்தையரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation), அம்பலவாணர் கலையரங்கின் தாய் நிறுவனமான கலைப்பெருமன்றத்தினுடாக பின்வரும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இப்பவுண்டேஷனில் வைப்பில் இடப்பட்டுள்ள பணத்திலிருந்து கிடைக்கப் பெறும் வட்டிப் பணத்திலிருந்து இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எம்மண்ணின் சிறார்களின் கல்விக்காக இப்பாரிய செயற்றிட்டத்தைச் செயற்படுத்த முன்வந்துள்ள புங்குடுதீவைச் சார்ந்த திரு, திருமதி சின்னத்தம்பி கனகலிங்கம் குடும்பத்தினருக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அம்பலவாணர் கலையரங்க கட்டிடச் செயற்குழு சார்பில் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

MSS Foundation ஆல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள்

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்.

தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.

கமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.

அம்பலவாணர் கலையரங்கின் எதிர்காலச் செயற்றிட்டங்கள்

v  அழகியற் கல்வியின் பிரிவுகளான சங்கீதம், நடனம், மிருதங்கம், வயலின்ஆகியவற்றில்  ஆர்வமுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களைபயிற்றுவித்தல்.

v  முன்பள்ளியுடனான  சிறுவர் பூங்கா ஒன்றினை அமைத்து சிறார்களின் உடல், உள திறன்களை விருத்தி செய்தல்.

v  மாணவர்களுக்கான அறநெறி வகுப்புக்களை நடாத்துதல்.

v  பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஒழுங்கு செய்தல்.

v  ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க ளுக்கும், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கல்.

v  உயர் கல்வியினை நிறைவு செய்து பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் சார்ந்த கணனி பயிற்சி நெறிகளை ஒழுங்கு செய்தல்.

v  உயர் கல்வியினை நிறைவு செய்து பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி (மின்னிணைப்பு, கட்டிடக்கலை,தையல் பயிற்சி) நெறிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

v  சிறுவர்கள், முதியோர்களுக்கான யோகாசன வகுப்புக்களை ஒழுங்கு செய்தல்.

v  கலை, கலாச்சார நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்துதல்.

v  மாதாந்தம் விசேட வைத்திய கலாநிதிகளை அழைத்து இலவச வைத்திய சேவைகள் வழங்குதல்.

v  ஆதரவற்ற திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.

v  திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு மண்டபத்தினை கொடுத்து உதவுதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here