புங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா

0
1081
புங்குடுதீவுவாணர் கலையரங்கம்அடிக்கல் நாட்டு விழா 16.06.2016 திகதிவியாழக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணிவரை புங்குடுதீவுகலைப் பெருமன்றத்தால் திரு.சு.நித்தியானந்தன் அவர்களின் (தலைவர்,புங்குடுதீவு கலைப் பெருமன்றம்) தலைமையில் மிகவும் சிறப்பாகநடைபெற்றது. முதலில் வாழ்த்துரையை பேராசிரியர் திரு.கா.குகபாலன்அவர்கள் வழங்கியதோடுவாணர் கலையரங்கம்அமைப்பதன்காரணத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட திரு.செந்தில் நந்தனன் (மேலதிகஅரச அதிபர், யாழ்ப்பாண மாவட்டம்) அவர்கள் பிரதம உரையாற்றியதுடன்,சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட, பேராசிரியர்திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளை (முன்னாள் துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்), திரு..இளங்கோவன் (கௌரவ ஆளுநரின் செயலாளர்,வடமாகணம்), திருமதி.எஸ்.தெய்வேந்திரம் (பிரதேச செயலாளர்,வேலணை), திரு..குருநாதன் (பிரதேச சபை செயலாளர், வேலணை),போன்றவர்களும் சிறப்புரையாற்றி இருந்தார்கள்.
அத்துடன் இதில் கலந்து கொண்ட (திருமதி. .பத்மகௌரி அவர்களின்தாயாரான) திருமதி. கனகலிங்கம் விஜெயலக்ஷ்மி, பிரான்சில் வசிக்கும்திரு.திருமதி. மதிவாணன் (கோபு) பத்மகௌரி குடும்பத்தினர் சார்பாக,சுப்பையா கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாகவாணர்கலையரங்கின்  சுற்றுமதில் (1200 அடி சுற்றளவு சுற்றுமதில்)அமைப்பதற்கான தொகையில் ஒருபகுதிக்கான காசோலையையும் வழங்கிஇருந்தார்
இறுதியாக புங்குடுதீவு கலைப் பெருமன்ற செயலாளர் திருமதி. தனபாலன்சுலோசனாம்பிகை அவர்கள் தனது நன்றியுரையில், வந்திருந்தஅனைவருக்கும் மட்டுமல்லாது, உலகம் பூராவும், வாணர் கலையரங்கை கட்ட பலவழிகளிலும் உதவி புரியும் அனைவருக்கும் நன்றி எனவும்,குறிப்பாக வாணர் அரங்கின் சுற்று மதிலைக் கட்டி முடிக்க முழுநிதிப்பங்களிப்பையும் வழங்க முன்வந்த பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி.மதிவாணன் (கோபு) பத்மகௌரி குடும்பத்தினருக்கும், இதன் முதல்கட்ட நிதியை இன்று நேரில் வந்து தந்து, விழாவை கௌரவப்படுத்திய திருமதி.கனகலிங்கம் விஜெயலக்ஷ்மி அவர்களுக்கும் மன்றத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here