புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் திருப்பணிகள்

0
651

1957 ஆம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டு நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டு, 1964 இல் குடமுழுக்கும் நடத்தப்பட்டது. 1957 இல் புதிய ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகள் நடைபெற்றன.

அம்பிகை அடியார்களே,

எமது ஆலயத்தில் புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளதென்பதை அம்பிகை அடியார்களாகிய தாங்கள் அறிந்ததே. மேற்படி புனருத்தாரணத்திற்குரிய கட்டுமானப் பொருட்கள், கட்டிட ஒப்பந்தகாரரின் கொடுப்பனவுகள், இதர வேலைகளுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றினால் இத்திருப்பணிக்கு பெருமளவு நிதி தேவைப்படுகின்றது. ஆகவே இந்நிதியுதவியைஅம்பிகை அடியார்களாகிய உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆலய உட்பிரகார மண்டப புனருத்தாரணத்திற்கென 200 க்கு மேற்பட்ட தூண்கள் தேவைப்படுகின்றன. ஆகவே இவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றையோ தங்கள் சார்பாகவோ அன்றி தங்கள் குடும்பம் சார்பாகவோ அல்லது தங்கள் மூதாதையர்களின் ஞாபகார்த்தமாகவோ அம்பாளுக்கு வழங்கி அம்பாளின் இத்திருப்பணி உரியகாலத்தில் நிறைவுற்று அம்பாளின் மகாகும்பாபிசேகம் சிறப்புற நிறைவேற வேண்டுமெனத் தங்களினதும் தங்கள் குடும்பத்தினரதும் பேராதரவை வேண்டி நிற்கின்றோம்.

இத்திருப்பணிக்கு நன்கொடை வழங்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் தங்கள் மூதாதையர்களின் ஆத்ம சாந்திக்கும் தங்கள் தொழில்சார் நிறுவனங்களுக்கும் தங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஸ்ரீ இராஐராஜேஸ்வரி அம்பாளின் ஈடிணையற்ற அருட்கடாட்சம் என்றென்றும் கிடைக்கவெண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.

நன்றி.
ஆலய பரிபாலன நிர்வாக சபையினர்.

தொடர்புகளுக்கு

தொலைபேசி :+94 77 788 7830
+94 77 736 4557
+94 77 415 5672
Sri Raja Rajeswari Ambal Thevasthanam,
Bank of Ceylon
A/C 0079409521
SWIFT CODE – BCEYLKLX
Branch code : 004
Branch No : 7010
Note: Pleace be inform that the above account is to be used only for TEMPLE THIRUPPANI funds.
Contact : kannakaiambal@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here