புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி ஆற்றிய பெருமகன் இவர்.

கதருடை அணிந்து .வீபூதி மூன்று குறிகளாக அணிந்து மெல்லிய தோற்றத்துடன் பொதுநல சேவை வலம் வந்தவர் இந்த பசுபதிபிள்ளை விதானையார் அவரகள ஆவார் .

சைவ வித்திய விருத்தி சங்கத்துடன் இணைந்து பல பாடசாலைகளை எமது மண்ணில் அமைத்து திறம்பட நிர்வகித்து கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரம் இட்ட கல்வி தெய்வம் இவர்.ஸ்ரீ கணேச ,பராசக்தி வித்தியாசாலைகளை அமைத்து நிர்வகித்தவர் .அத்தோடு சித்திவிநாயகர் வித்தியாசாலை .

புங்குடுதீவு மகா வித்தியாலயம் அகியவ்டிரின் ஆரம்பத்துக்கும் பெரும் முயற்சியில் பங்கெடுத்து வெற்றி கண்டவர்.

புங்குடுதீவின் அனைத்து பாடசாலைகளுக்கும் சைவ சமய சம்பந்தபட்ட பெயர்களையே வைப்பதில் பெரு வெற்றி கண்டதும் மகிழ்ச்சிக்குரியது.

1910 பங்குனி மூன்றில் ஸ்ரீ கணேச வித்தியாசாலையை ஆரம்பித்து1954 வரை அதன் முகாமையாளராக பணி ஆற்றி இந்த பாடசாலையின் அதியுன்னத வார்ச்சிக்கு காரணமானவர்.ஆரம்ப காலத்தில் கிராமக் கோடு நீதிபதியாகவும் ,பின்னர் சுமார் இருபது வருடங்களாக கிராம சங்க அக்கிரசானராகவும் மண்ணுக்கு சேவை செய்த சேவையாளன் .

அந்நியர்களின் மத பிரசார அழுத்தத்தின் நெருக்கடியான கட்டத்தில் பல சிரமங்களின் மத்தியில் புரட்டஸ்தாந்து பாடசாலைகளை ஆரம்பித்து அன்னியர் சலுகை கொள்கை வகுப்பு யுத்தம் செய்த வேளையிலும் சைவ பெரியார்களை அணுகி ஒன்று பட்டு பெரியார் நீ.அம்பலவாணர் அவர்களின் காணியில் 1910இல் ஸ்ரீ கணேச வித்தியாசாலையை நிறுவினர்.

தொடர்ந்து அந்த காலத்தி லேயே 1914ஆம் ஆண்டு ஆவணி வரை அரச நன்கொடை இன்றி சொந்த முயற்சியில் இந்த பாடசாலைய நடத்தி வந்தார் .

முதல் இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் போசகராக இருந்தார். அப்போது நாடு தழுவிய ரீதியில் சைவ சமய தேவார பாராயணங்கள் ,பாடல்கள் .உடல் பயிற்சி போன்றவற்றில் உயர்தரப் பரீட்சைகளை நடத்தி பரிசில்கள் வழங்கி ஊக்குவித்தார் .

அந்த காலத்தில் முதலியார் குல.சபாநாதன் அவர்கள் 1951ஆம் ஆண்டு வித்தியாலய பழைய மாணவர் சங்க இதழில் புங்குடுதீவினை வெளியுலகினர் அறிய வைத்த பெருமை பசுபதிபிள்ளை மூலமே என்றும் வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர் பெரியவர்களை உபசரிப்பதில் இனியவர் என்றும் எழுதி உள்ளார் .

இவர் முதலி விதானையாரக கடமை புரிந்து பின்னர் கிராம சங்க தலைவராக தொண்டு ஆற்றினார் .

சிவன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்திருந்த சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் வட மாகாணத்திலேயே சிறந்து விளங்கிய வேதாகம சாஸ்திர பாடசாலையை அமைத்த பெருமை பெற்றவரும் இவரே. யாழ் மாவட்டத்தின் ஏராளமான பிராமணர்கள் வேதம் கற்க இந்த பாடசாலையே திணை நின்றது சாதனையாகும் .

இது போன்ற ஒரு பாடசாலையை யாழ்ப்பாணத்தில்நிறுவ எடுத்துக் கொண்ட முயற்சி சிலரின் தடைகளினால் முடியாமல் போனது.

இன்று இலங்கையிலேயே எந்த கிராமத்திலும் இல்லாத வாறு புங்குடுதீவு பதினைந்து பாடசாலைகள் உள்ள ஒரு கிராமமாக கல்வி கோலோச்சுகிறது என்றால் இவரை நாங்கள் வணங்கி மதிப்பளிதாக வேண்டும் .

எத்தனை கோயில்களை நாம் கட்டி வழிபட்டாலும் எமது கலவி கோயில்களை திறந்து வாய்த்த இந்த பகவனை தொழுவோமா. இவரதுஸ் சேவை கண்டு எழுதிய சில கவி மாலைகள் .

பண்டிதமணி கணபதிபிள்ளை அவர்கள்.

புங்குடுதீவேன்றார் புகல் பசுபதிப்பிள்ளை

எங்கும் புகழ் நிறுவி ஏகினார் -இங்கிவர் போல்
தோன்றிற் புகழொடு தோன்றுக அக்திலார்
தொன்றிலி ற் தோன்றாமை நன்று

கவிஞர் ந.க.சண்முகநாத பிள்ளை அவர்கள்

கல்வி அழகே அழகென்று கண்டவர்
கண்ணிய மிகை பசுபதியார்
பல்கிப் பலவளம் பெருகிடவே
பாதையடியொற்றி ச் சென்றிடுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here