புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில் இல் பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூக சேவை ஆன்மிகம் தமிழ்த்தொண்டு என அனைத்து துறைகளையும் தொட்டு சேவையாற்றினார்.

 

தனது இளவயதில் பெருங்காடு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம அந்த பகுதி மக்களுக்கு சேவை செய்தவர்  தனது பேச்சாற்றல் துணை கொண்டு அகில இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார் . நெடுந்தீவு முதல் அம்பாறை வரை தனது சிறந்த பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்து தமிழரசு கட்சியின் தூணாக விளங்கினார்.  அக்கட்சியின் உயர்ந்த பதவிகளில் அலங்காரம் செய்தார். ஒரு முறை இவருக்கான அனுபவம் திறமை காரணமாக கிடைக்கவிருந்த உயர் பதவி ஒன்று சில உள்நோக்கம் கொண்டோரால் தவறி போனது.

கட்சி அரசியல் மண்ணுக்கு பெரிதாக உதவ முடியாத நிலை கண்டு அதனை விட்டு சர்வோதய அமைப்பில் இணைந்து கொண்டார் .இல் அகில இலங்கை சர்வோதயத்தில் சேர்ந்து கொண்ட இவரால் வட பகுதிஎங்கணும்  இந்த அமைப்பு பரவ ஆரம்பித்தது.இந்த அமைப்பின் ஊடாக பல வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளை இனத்தவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.ஏராளமான வெளிநாட்டு உதவி நிறுவனங்களை எமது மண்ணுக்கு வரவழைத்து அதன் மூலம் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். காலப்பகுதியில் சர்வோதய சிங்கள தலைமை செய்யும் சில வேறுபாடுகளை உணர்ந்து தனியே வட இலங்கை சர்வோதயம் என்ற புதிய அமைப்பை நிறுவினார். இதன் தலைமையகத்தை புங்குடுதீவில் அமைத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here