புங்குடுதீவு கிராமத்தில் பிறந்து சிறந்த மாணாக்கனாகத் திகழ்ந்து 1959ல் ஆசிரியரானார்.
கிராம வளர்ச்சிக்காக குறிகட்டுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
அத்துடன் கல்வி வளர்ச்சிக்கழகம் என்ற அமைப்பினையும் ஏற்படுத்தியுள்ளார்.
1974ல் புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினை மேன்மையடையச் செய்யும் பொருட்டு தலைமைப் பொறுப்பினை ஏற்று எரிபொருள் நிரப்பு நிலையம். மக்கள் கடைகள், மக்கள் வங்கிக் கிளை என்பவற்றை நிறுவி உள்ளார்;.
இவை தவிர பாடசாலைகளை மீளத் திறத்தல் முன்பள்ளிகளின் வளர்ச்சியை முன்னெடுத்தல், வேலையற்றிருப்போருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிறப்பால் கத்தோலிக்கத்தினை சார்ந்திருந்தபோதிலும் சகல சமயங்களையும் மதித்து தன்னால் அச் சமயத்தவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகளைச் செய்துள்ளார்.