Monday, March 23, 2026

புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம்

முகவரி / Address: புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம்
Telephone:  0094 21 4920635
website: pungudutivumurugamoorthytemple.com ஆலய பிரதம குரு: சிவஸ்ரீ க. குகதாஸக் குருக்கள்
தொடர்புகள்
 

இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும் வாழ்கின்ற இக்கிராமத்தில் இவ் சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி வேல் பெருமாள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார்.

இவ் ஆலயத்தின் தொன்மையை வரலாற்றை அடுத்து நோக்குவோமாக இருந்தால் புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் தல்லையப்பற்று என்று 1800 – 1900 வரையான காலப்பகுதியில் தீவகத்தில் ஒரு நிர்வாக அலகாக இருந்தததாக சொல்லப்படுகிறது.

இவ் ஆலயம் யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள பதிவேடுகளின் படி 1892 ஆம் ஆண்டு தீவக மணியகாரர் மகள் இராமாசிப்பிள்ளை அவர்களால் சுண்ணாம்புக் கட்டடத்தில் வேலை மூலவராகக் கொண்டு மடாலயமாய்க் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் ஆலயம் கச்சேரியில் 1892 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1805 என்ற பதிவு எண்ணையும் கொண்டுள்ளது.

புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தான மகோற்சவம்: Thallaiyapatru Murugan Temple Festival 2026

புங்குடுதீவு தல்லையபற்று சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தான மகோற்சவம் 2026 புங்குடுதீவு கிழக்கு, தல்லையபற்று என்னும் திவ்விய ஷேத்திரத்தில் கல்விமான்களும், நல்ல தர்ம சிந்தனையாளர்களும் செறிந்து வாழும் பதியில், அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல்...

புங்குடுதீவு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் பெருமான் தைப்பொங்கல் விழா 2026 | Pungudutivu Temple Event

சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் பெருமான் தைப்பொங்கல் தின நிகழ்வுகள், புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று மண்ணில் மிகவும் பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி (15.01.2026) இனிதே...