புங்குடுதீவெனும் தாயவளே! உனைப்
போற்றி நாம் வணங்குகிறோம்
எங்களை ஈன்ற இனியவளே – உனை
என்றுமே நாம் மறவோம்
மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பி
மறுபடி நாம் வாழ்வோம்!
சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள்
சகலதும் – நாம் பெறுவோம்!

தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ!
எம் – உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி!

கோயில் தேவாலயம் விழாக்களை காணும்
குளங்களும் வயல்களும் நிரம்பும் – புலம்
மேவிய மக்களும் கூட்டமும் சேரும்
மேன்மைகள் வந்துகை கூடும்
நோயினில் வாடிய வாழ்வது நீங்கி
நிம்மதிக் காற்றது வீசும்

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் – நாங்கள்
மறந்திடுவோமோ உன்னை
உன்னில் எழுதிய – ‘அ’னா வரிகளால்
உயர்வடைந்தவர்கள் நாங்கள் – தாயே!
பனைமர வலிமை பெற்றோம் உன் நினைவுடன்
நிமிர்ந்திடக் கற்றோம்!
வருந் தடைகளை துணிவுடன் கடப்போம்

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

Written by:

Aiadurai Sivasamy
Chitralayaa
Ward No 11
Pungudutivu

2 COMMENTS

  1. Hello Nimalan This keetham has been writtenby my dad please put his name down.

    Aiadurai Sivasamy
    Chitralayaa
    Ward No 11
    Pungudutivu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here