யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான்.
இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார்.