புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி – ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 10.03.2011 வியாழக்கிழமை முதல் 19.03.2011 சனிக்கிழமை வரை 10 தினங்கள் வேத ஆகமவிதிப்படியும், மிகவும் சிறப்பாக மஹோற்சவப் பெருவிழா நடைபெற்றது.
இலங்கையில் மட்டுமன்றி கனடா, ஐரோப்பிய நாடுகளிலுமிருந்தும் பலமக்கள் விழாக்களில் பங்குபற்றி வழிபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. மஹோற்சவ பெருவிழாவின் முக்கிய அங்கமாக வேதகோஷங்கள் முழங்க, தேவார பண்ணிசைகள் ஓத, நாதஸ்வர தவில் இசை ஒலிக்க, மக்களின் பக்திபூர்வமான கோஷங்களோடும் சிறந்த அலங்காரத் தோற்றத்துடன் தேரில் பவனிவருகின்ற அருட்காட்சியளிப்பதும் சிறப்பாக இருந்தது. கனடாவிலிருந்து வருகைதந்த ஆலய முதல்வர், பிரதமகுரு சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் ஆலய நிதழ்வுகளை சிறப்பாக ஒழுங்குசெய்திருந்தார்.
[vsw id=”Ya7hXlnhPF8″ source=”youtube” width=”475″ height=”354″ autoplay=”no”]