புங்குடுதீவிலே அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் சைவ கலாமன்றத்தில் துணையுடனும் யாழ்ப்பாண சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தின் பேருதவியுடன் 1926ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இப் பாடசாலை யாழ் இந்துக் கல்லூரி அதிபராக விளங்கிய திரு. டிருப் அவர்கள் திறந்து வைத்தார். பாடசாலையின் தலைமை ஆசிரியராக உயர் திரு நமசிவாயம் அவர்கள் கடமையாற்றினார். அதன் பின்னர் வி.ஜே.சின்னையா ஆசிரியர் தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து 1929ம் ஆண்டு பேராசிரியர் சி. இ. சதாசிவம்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராக பணி புரிந்தார்கள். 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் இப் பாடசாலை “துவிபாஷா” பாடசாலையாக மாறியது.