பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன் அவர்கள் புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து புங். சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கல்வி கற்று யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று பேராதனைப்பல்கலைக்கழகத்தில் புவியியல்துறையில் கல்வி பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் துறைத்தலைவராக பேராசிரியராக பதவி வகித்தவர்.
எளிமை வடிவானவர். யாருக்கும் உதவி செய்யும் மனப்பாண்மையுடையவர். யாழ் செஞ்சிலுவைச்சங்கம், அரிமாக்கழகம் போன்ற பல்வேறு கழயங்களில் அங்கத்தவர்.
மண்ணை மறக்காத மனிதர் புங்குடுதீவு என நாம் கட்டுக்குள் இருந்தாலும் எம்உறவுகள் அனைத்தையும் தீவகம் என்ற கட்டுக்கோப்பில் வைத்து செயலாற்றியவர்.
இவர் தனது அறிவுக்கடலால் புங்குடுதீவு பற்றிய பல கட்டுரைகளைப் படைத்து ஆவணப்படுத்தியவர்.
எம்ஊா் பல மனிதர்களைப் பெற்று எடுத்தாலும் சில மனிதர்கள் ஊர்பற்றுடன் திகழ்வது இ.யல்பு. அதற்கு ஒரு உதாரண புருசர் பேராசிரியர் குகபாலன் அவர்கள். அவரிடம் சீனியர்,சுப்பர் சீனியர், பேபி குறூப் என பல்வேறு பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பதவி நிலை பாராது எல்லோருடனும் இயல்பாக பழகும் சுபாவம், இளையவர்களை தட்டிக்கொடுத்து அவர்களை முன்னுக்கு கொண்டு வரும் இயல்பு படைத்தவர். ஊருக்கு உழைக்கும் உத்தமர் என்று கூறலாம்.
பேராசிரியர் குகபாலன் என்ற கல்வி விருட்சம் எமக்கு உமது ஊரை வாழ்வு படுத்தும் ஒரு ஆலமரம். அவர் தற்போது பல்கலைக்ழக விரிவுரையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று சிறந்த தொண்டாற்றிக்கொண்டு இருக்கும் போது கனடா புங்குடுதீவு பழைய மாணவர்சங்கம் கனடாவிற்கு அழைத்து விழா ஒன்றை 23.01.2016 எடுத்து உலகெங்கும் எங்கள் தங்கத்தலைமகனை வாழ்த்து வணங்குகிறது.
அவரின் விழாவில் நாம் கலந்து கொள்ள முடியாவிடினும் இங்கிருந்து எமது ஊர் புங்குடுதீவு மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம் இறுபிட்டி அரியநாயகபுலத்து இறைவனின் கடாச்சம் கிடைத்து வாழ்க பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம். எங்கே உங்களின் பகிர்வுகளை எமது மூத்த விருட்சத்துக்கு பகிருங்கள்
தகவல் Sritharan Ganesh